Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

ஆட்டோ டிரைவர் கொடூரம்.. டியூஷன் எடுக்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

Sekar October 17, 2022 & 16:05 [IST]
ஆட்டோ டிரைவர் கொடூரம்.. டியூஷன் எடுக்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!Representative Image.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில் 18 வயது இளம்பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்து பின்னர் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது உதவியாளரால் தூக்கி வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹுசைங்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சின்ஹாட் பகுதியில் ஒரு மாணவருக்கு டியூஷன் எடுத்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

சின்ஹாட்டில் ஆட்டோவிற்காக இளம் பெண் நின்று கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் அந்த இடத்தை அடைந்தார், அந்தப் பெண் சார்பாக்கிற்கு அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டுள்ளார். ஆட்டோவில் டிரைவருடன் உதவியாளராக ஒருவன் இருந்துள்ளான்.

சரி என்று அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றுக்கொண்ட ட்ரைவர் சில கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில், சாலையின் இருண்ட பகுதிக்கு தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார். இதையடுத்து இளம்பெண் கூச்சல் போட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவான் வலுக்கட்டாயமாக இருண்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து குற்றவாளிகள் இருவரும் மாறி மாறி சுமார் மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு, தலையில் ஒரு கனமான பொருளா அடித்து போகும் வழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். 

மேலும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளான். பின்னர் கடவுப்பாதைக்கு அருகில் ‘UP 112’ என்ற போலீஸ் வாகனத்தை பார்த்து சம்பம் குறித்து விளக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்