Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day Meaning

Mugunthan Velumani Updated:
காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day MeaningRepresentative Image.

காதல் என்றால் என்ன இரு மனங்கள் இணைவது மட்டும் தானா..?? இல்லை  காதல் என்ற ஒன்று உருவாக இரு மனங்களின் ஒத்துழைப்பும் வேண்டுமா..??   இரு நபர்கள் மனதிலும் ஒரே நேரத்தில் ஒரே உணர்வு தோன்றினால் அது தான் காதலா..?? எத்தனை கேள்விகள் காதலர் தின கொண்டாட்டத்திற்கு முன்பு காதல் பற்றிய புரிதலை இந்த பதிவில் உணர்வோம்.

காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day MeaningRepresentative Image

காதலை  உணராத மனிதன் இல்லை

உலகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை தெரிந்து வைத்திருக்க கூடிய சில வார்த்தைகளில்  முக்கியமான ஒரு வார்த்தை  காதல் என்று தயங்காமல் கூறலாம், அதற்கு காரணம் காதலின் அர்த்தம் தெரிவதற்கு முன்பே காதல் அனுபவத்தை அவர்கள் புரிதல் மற்றும் வயதிற்கு ஏற்றார் போல் அனைவரும் தெரிந்து கொள்வது தான். ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் யாரும் கற்றுத் தராமல் தானாக உணர்ந்து அனுபவித்து அறிந்து கொள்ளும் சில உணர்வுகளில் காதலும் ஒன்று என்று கூறினால் மிகையில்லை.

காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day MeaningRepresentative Image

ஒரு தலை காதல் ஒரு சுகம்

இந்த உலகத்தில் காதல் என்ற ஒரு  உணர்வு பிறக்க இரு மனங்களின் சம்மதம் தேவையில்லை காதல் உணர்வு பிறக்க ஒரு மனம் போதும், ஆனால் ஒரு காதல் சேர இரு மனங்களின் புரிதலும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என்பது உறுதி. மனிதன் வாழ்க்கையில் காதல் பிறந்து அதில் வெற்றி பெற்றால் தான் அது உண்மையான காதல் என்று அர்த்தமில்லை இங்கு சேர்ந்த காதலை விட இறுதி வரை சேராமல் மனதில் வாழ்ந்த காதல் தான் அதிகம் என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள்.

காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day MeaningRepresentative Image

காதல் பிரிந்தாலும் ஒரு காவியம்

இந்த உலகத்தில் காதல் சின்னங்கள், காதல் கதைகள், காதல் படைப்புகள் என பல வகையான காதல் தரவுகளில் இருந்து அறியப்படுவது என்ன வென்றால், காதல் என்ற ஒரு உணர்வு  தோன்றி விட்டால் அது புனிதம் தான். காதல் வெற்றி பெற்றால் மட்டும் தான் உண்மை சேராத காதல் உண்மை இல்லை என்ற கருத்தை மறுக்க தான் பல வித படைப்புகள் மற்றும் காதல் சின்னங்கள் அதிக அளவில்  பிரிந்த காதலும் உன்னதமான ஒன்று தான் என்று காலத்திற்கும் உணர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் என்ற உணர்வில் விழுந்த மனங்கள் இணைந்தாலும் பிரிந்தாலும் அது ஒரு காவியம் தான் என்று கூறினால் மிகையில்லை.இதை மனித மனம் உணர்ந்தால்  தான் காதலிக்க அது தவறுவதில்லை.

காதல் ஓவியம் மறையாத காவியம்..! காதலர் தினத்திற்கு முன் காதல் பற்றிய சில பதிவுகள்..! |Valentine's Day MeaningRepresentative Image

காலம் கடந்தும் மாறாத காதல்

மனிதன் தனது வாழ்க்கை பயணத்தில் எப்போது காதல் உணர்வை  பெறுவான் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அவனது பயணம்  முடிவதற்குள் கண்டிப்பாக காதல் உணர்வை அடைவான் என்பது மட்டும்  உறுதி. காதல் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் அதை பெறாமல் வாழ்க்கை என்றும் முழுமை அடையாது. உலகத்தில் தோன்றும் அனைத்து காதலும் இன்பத்தில் முடியுமா ..? என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் தனது வாழ்க்கையில் ஒரு  காதலை அடையும் என்பது மட்டும் உறுதி.

காதல் என்ற உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வருடத்தில் ஒரு நாள் போதாது, உலகில் மனிதன் என்ற உயிர் இருக்கும் வரை அவன் மனதில் காதல் தோன்றி கொண்டு இருக்கும் வரை வருடம் முழுவதும் காதலர் தினம் தான் காதல் கொண்டாட்டம் தான் என்று கூறுவதில் ஐயமில்லை. மேலும் காதலர் தின கொண்டத்தில் காதலை உணர்ந்து கொண்டாடுவோம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்