Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

நாளைக்கு பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு தகுதி இல்லையா?... சீறும் திருமா!

KANIMOZHI Updated:
நாளைக்கு பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு தகுதி இல்லையா?... சீறும் திருமா! Representative Image.

தமிழக ஆளுநர் நாளை துவங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில்  உரையாற்ற தகுதியற்றவர் என தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார்.

 

தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் எனக்கூறி வேண்டுமென்று பெரியார் அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்று அதற்கு எதிரான ஒரு கருத்தை, தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறார். ஆளுநர் ஆர் எஸ் எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம்.

 

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை.

 

இவர் சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை படிப்பது எந்த வகையில் பொருத்தம். திராவிட மாடல் என்று முதல்வரால் அழைக்கப்படுகிற திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல எனத் தெரிவித்துள்ளார். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்