புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்
அதிநவீன காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மனித கழிவை கலந்திருப்பது இந்த தேசத்திற்கே தலைகுனிவு. மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் இதை கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இதை கண்டிக்காமல் சகித்துக் கொண்டிருப்பது ஒரு பேரவலம்.
போராடுகிற நாள் தான் விடுதலை சிறுத்தைகளுக்கு நல்ல நாள் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் வேங்கைவயல் பிரச்சனையில் சரியாக போராடவில்லை என சராசரி அரசியல்வாதியை போல ஆர்ப்பர்கள் பார்க்கிறார்கள். ஆனால் சராசரி அரசியல்வாதி திருமாவளவன் அல்ல, துன்பங்களை கடந்து வந்தவன் திருமாவளவன்
.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் கூட்டத்தில் இருந்தாலும் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை கண்டித்து கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம், நாமக்கல், சேலம், குறிஞ்சாக்குளம், புதுக்கோட்டை என எண்ணற்ற போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தியுள்ளது
எஸ்சி எஸ்டி பிரச்சனை பொருத்தவரையில் தமிழக மட்டுமல்ல இந்தியா முழுவதும் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்துவது இல்லை. தற்போது கவர்னர் திரித்து பேசுவதைப் போலவே காவல்துறையினரும் திரித்து தான் பேசுவார்கள். ஜெயலலிதா மரணத்தின் மர்மம் நீடிப்பதை போல வேங்கை வயல் சம்பவத்திலும் மர்மம் நீடிக்கிறது.
யாரைக் காப்பாற்ற இதனை மெத்தனம்? வேங்கைவயல் பிரச்சனையை நேரில் ஆய்வு செய்ய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சென்றபோது அங்கே கோவில் பிரச்சனை இருந்தது தெரிய, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். உடனே திராவிட மாடல் ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் என பேசப்பட்டதே தவிர குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததை திசை திருப்பப்பட்டது, அதைப்பற்றி யாரும் பேசவில்லை
இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி இரண்டு வாரங்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றால் யாருக்கு இது கலங்கம்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…