Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வெண்ணிலா கபடி நடிகர் உயிரிழப்பு... ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 

Manoj Krishnamoorthi Updated:
வெண்ணிலா கபடி நடிகர் உயிரிழப்பு... ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Representative Image.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மறக்கமுடியாத படம் ஆகும்.  இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

வெண்ணிலா கபடி நடிகர் உயிரிழப்பு... ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Representative Image

வெண்ணிலா கபடி நடிகர் உயிரிழப்பு

வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து சினிமா ரசிகர் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஹரி வைரவன் ஆவார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தன் அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் குடும்பத்தினரின் அரவணைப்பில் இருந்தார்.  மருத்துவ செலவுக்கு கூட வசதி இல்லாததால் ஹரியின் மனைவி உதவி கோரியிருந்தார். இவரின் மருத்துவ செலவுக்காக சக நடிகர்கள் ப்ளாக் பாண்டி, கார்த்திக், சரவணா போன்றவர்கள் உதவி செய்து வந்ததாக தெரிகிறது. 

ஆனால் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஹரி வைரவன் இன்று அதிகாலை சுமார் 12:12 மணிக்கு இறந்தார். மேலும், ஹரின்  உடல் இறுதி சடங்கிற்காக அவரின் சொந்த ஊரான மதுரையிலுள்ள கடச்சேனந்தலிற்கு கொண்டு வரப்பட்டது. இவரின் உடல் மாலை 4:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிய வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்