மதுரை பழங்காநத்ததில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷித் சார்பில் துறவிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மதுரை ஆதினம் ஆவேசமாக பேசியிருந்தார். அப்போது இந்து கடவுள்களை கொச்சையாக காட்டும் நடிகர் விஜய் படங்களை பார்க்காதீங்க என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் விஜய் படங்களில் இந்து கடவுள்கள் அவமதிப்பு காட்டிச்சிகள் அதிகம் உள்ளன அதனை பார்ப்பதை தவிர்க்கவும், மேலும், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்வதாகவும், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்குத் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சை கண்டித்து மதுரை வடக்கு விஜய் மக்கள் மன்றம் சார்பாக கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘எச்சரிக்கை மதுரை ஆதீன மடத்தின் சொத்துகளை கொள்ளையடிக்கத் திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு சாதி, மதம் எதுவுமில்லை. தளபதி விஜய் மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…