நாகப்பட்டினம் நகரில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், இவர்களில் விடுதியில் தங்கி உள்ளவர்களுக்கு நேற்று இரவு நிர்வாகம் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டன.
இதை சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியதில், மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்துள்ளது.
இது தெரியாமல் மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து தொடர்ந்து வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், உணவு சாப்பிட்ட மாணவிகள் நலமுடன் இருப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல் விஸ்வாதன் விளக்கம் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…