தசரா நிகழ்வில், துர்கா சிலையை ஆற்றில் கரைக்கும் சமயத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரியில், தசரா திருவிழா நடைபெற்றது. இதில், துர்கா சிலையை ஆற்றில் கரைப்பதற்கு சென்ற சமயத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 40-க்கும் அதிகமானோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, சிலை கரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…