Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023

Priyanka Hochumin Updated:
ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் உங்களுக்கு தெரியுமா காதலர் தினமானது ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று. அதாவது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை லவ்வர்ஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உள்ளது. அதில் முதல் நாளுக்கான [February 7] சிறப்பு ரோஸ் டே. நாம் யாரை காதலிக்கிறோமோ அவர்களுக்கு ரோஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்துவது வழக்கம். 

காதல் இருமனம் ஒன்றாக சேர்வது மட்டும் கிடையாது. காதலில் நிறைய வகை உள்ளது - வலி, வேதனை, துக்கம், பிரிவு, மகிழ்ச்சி என்று அதற்கு நிறைய அர்த்தம் உள்ளது. இதில் எந்த வகையான காதலுக்கு என்ன நிறத்தில் ரோஸ் தர வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

சிவப்பு ரோஜா | Red Rose Meaning

காதல் என்பதற்கு அடையாளம் சிவப்பு ரோஜா தான். அதற்கு உதாரணம் காதலர் தினம் திரைப்படம் தான். அப்படத்தைப் பார்க்கும் கண்கள் ரோஜாக்களின் அழகால் பிரம்மித்து போகும் வகையில் அமைந்திருக்கும். காதலர் தினத்தன்று சிவப்பு ரோஜா கொடுப்பதற்கான அர்த்தம் - அழகு, ஆர்வம், ஆசை மற்றும் காதல். ஒருவரை காதலிக்க தயாராக இருக்கும் தருணத்தில் அவர்களுக்கு சிவப்பு ரோஜா தர வேண்டும். அதே போல deep red நிறத்தில் ரோஜா தருவதால் நாம் அவரை எந்த அளவிற்கு நேசிக்கிறோம் என்பதை உணர்த்துமாம்.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

வெள்ளை ரோஜா | White Rose Meaning

மகத்துவமான மற்றும் தூய்மையான காதலுக்கான அடையாளம் இந்த வெள்ளை ரோஜா. எந்தெந்த தருணத்தில் இந்த ரோஜாக்களை பயன்படுத்தலாம் என்றால் - திருமண நிகழ்ச்சிகளில் இருவரின் காதல் மற்றும் வாழ்க்கை தூய்மையானதாக அமையும் வகையில் இதனைப் பயன்படுத்தல். அல்லது உங்களுக்கு முன்னாள் காதல் மீதான மோகம் குறையாமல் இருக்கும் பட்சத்தில் வெள்ளை ரோஜா தரலாம். இதற்கான மற்றொரு அர்த்தம் புதிய துவக்கத்தை குறிக்கும்.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

மஞ்சள் ரோஜா | Yellow Rose Meaning

நீங்கள் வாழ்த்துத் தெரிவிக்கும் விரும்பும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மஞ்சள் ரோஜாவை தரலாம். ஏனெனில் இந்த ரோஜாவிற்கான அர்த்தம் - மகிழ்ச்சி, அக்கறை, மற்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பாசம் [பிளாட்டோனிக் பாசம்]. மேலும் நாளை ரோஸ் டே என்பதால் உங்களுடைய நண்பருக்கு மஞ்சள் ரோஜாவை தந்து அவர்களுக்கு உற்சாகத்தை அளியுங்கள்.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

இளஞ்சிவப்பு ரோஜா | Pink Rose Meaning

நாம் யாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறமோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறவர்களுக்கு இளஞ்சிவப்பு ரோஜா தரலாம். அதற்கான அர்த்தம் என்னவென்றால் - போற்றுதல், மென்மை, கண்ணியம், நேர்த்தி, அப்பாவித்தனம் மற்றும் மகிழ்ச்சியாகும். அதில் வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் கருணை மற்றும் இனிமையைக் குறிக்கின்றன. ஆழமான இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியை தெரிவிக்கின்றன.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

பீச் ரோஸ் | Peach Rose Meaning

பீச் நிற ரோஜாக்கள் நேர்மையையும் நன்றியையும் தெரிவிக்கின்றன. நாம் நன்றி தெரிவிப்பவர்களுக்கு இந்நிற ரோஜாவை தரலாம். மேலும் வெளிர் பீச் ரோஜாக்கள் என்றால் அடக்கம் என்ற பொருளைக் குறிக்கும்.

ரோஜா நிறங்களுக்கான அர்த்தம்..யாருக்கு எந்நிற ரோஜாவைத் தரலாம் | Rose Day 2023 Representative Image

ஊதா ரோஜா | Purple Rose Meaning

நம்மை வியக்கும் வகையில் இருபவர்களுக்கு ஊதா நிற ரோஜாவை அளிக்கலாம். ஏனெனில் அது மந்திரம் மற்றும் மாயம் என்ற பொருளைக் கொண்டுள்ளது. அது மட்டும் இன்றி நாம் ஒருவரைப் பார்த்த உடன் காதல் ஏற்பட்டால் அவர்களுக்கு வெளிர் ஊதா அல்லது லாவெண்டர் ரோஜாவைத் தரலாம். ஆழமான ஊதா நிற ரோஜாக்கள் கம்பீரத்தையும் ராயல்டியையும், வணக்கத்தையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்