மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகளின் உயிரை பலி வாங்கியது இந்தியாவின் இருமல் டானிக்ஸ் தான் என்று குற்றம் எழுந்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் உள்ள சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் (Maiden Pharmaceutical Limited) தயாரிக்கப்பட்ட 4 டானிக்குகளில் மனிதர்களால் ஏற்க முடியாத அளவுக்கு வேதிபொருட்கள் (டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால்) கலந்து இருப்பதே இந்த கோர சம்பவத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், இச்சம்பவம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் விரிவான தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த இருமல் டானிக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்மாறும் WHO எச்சரித்துள்ளது.
பிஞ்சு குழந்தைகள் தொடர்ந்து கொத்து கொத்தாக செத்து மடிந்து வருவதால், இது மக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…