இந்தியாவில் அதிலும் முக்கியமாக வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஹோலி பண்டிகை முதன்மைப் பெற்றது. இந்த வருடம் மார்ச் 08, 2023 அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் தங்களின் கவலைகளை மறந்து தங்களுக்கு நெருக்க மாணவர்கள் மீது வண்ண நிறங்களை பூசி மகிழ்வார்கள்.
மொத்தம் இரண்டு நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒன்று - ஹோலிகா தஹன் அல்லது சோட்டி ஹோலி என்பது தான் இந்த பண்டிகையின் விசேஷம். தீமைகளை அளித்து நன்மைகளை நிலைநாட்டும் வண்ணம் இந்த விழா ஹோலிக்கு முந்தின நாள் மார்ச் 7 ஆம் தேதி கொண்டாடப்படும். இரண்டு - துலண்டி (Dhulandi) / ரங்காலி ஹோலி (Rangwali Holi) விழா மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணன் ராதை மீது கொண்ட அன்பை வெளிப்படும் வகையில் வண்ணங்களால் வெளிப்படுத்தினார். அதனை பின்தொடர்ந்து ஹோலி அன்று வண்ணங்கள் பூசி கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
இது இந்து காலண்டர் படி, பால்குன் மாதத்தின் முழு நிலவு இரவில் கொண்டாடப்படும். புராணக்கதைகள் படி, மும்மூர்த்திகளுள் ஒருவரான பெருமாள் ஹோலிகாவை வதம் செய்ததற்காக பல வருடமாக கொண்டாடப்படுகிறது. ஹோலிக்கு முந்தின நாள் மார்ச் 7 ஆம் தேதி மாலை மக்கள் அனைவரும் தீ மூட்டி ஹோலிகா தஹன் மந்திரத்தை உச்சரித்து இந்த உலகின் அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டுவதற்காக பிராத்தனை செய்வார்கள். பிறகு பக்தர்கள் தண்ணீர் பாத்திரங்களுடன் மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை நெருப்பை சுற்றி நடந்து வழிபடுவார்கள். கடைசி சுற்று முடிந்தவுடன் பக்தர்கள் பாத்திரங்களை காலி செய்யவேண்டும்.
இந்த நெருப்பு சடங்கு முடிந்தவுடன் பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திலகமிட்டு பருவத்தின் பயிர்களை வேகவைத்த அல்லது வறுத்த சாப்பிடுவார்கள். ஒரு சில பேர் இந்த ஹோலிகா சாம்பலை வீடுகளுக்கு எடுத்து செல்வது ஒரு வழக்கம்.
ஹோலிகா தஹன் நேரத்தில், சிறிது கோதுமை, பட்டாணி மற்றும் ஆளி விதையை நெருப்பில் சுட்டு உண்பது உடலுக்கு நல்லது.
ஹோலிகா தஹானுக்கு முன், குடும்ப உறுப்பினர்கள் உப்தானைப் (Scrub) பயன்படுத்த வேண்டும். மீதியை ஹோலிகாவின் நெருப்பில் எரிப்பது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் நெகடிவ் எனர்ஜி நீங்கி ஆரோக்கியமாக இருப்போம் என்பது ஒரு நம்பிக்கை.
ஹோலிகா பூஜையின் போது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.
ஹோலிகா பூஜையில் பங்கேற்பதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் வளமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஒரு ஐதீகம்.
ஹோலிகா தஹான் பூஜையின் போது தலை முடி வெளியே தெரியாதது போல துணி அல்லது துப்பட்டா பயன்படுத்தி மூடி கொள்ள வேண்டும்.
ஹோலிகா தகனின் நாளில் இறைச்சி, மது போன்றவை அருந்த கூடாது.
இந்த நாளில் கருப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும், அவை நெகட்டிவிட்டியின் அடையாளமாகும்.
அதே போல் ஒரு குழந்தை கொண்டவர்கள் ஹோலிகா தஹான் பூஜைக்கு தீ மூட்டக்கூடாது.
ஓராண்டுக்குள் திருமணம் ஆனவர்கள் ஹோலிகா தஹனின் நெருப்பை பார்க்கக்கூடாது. காரணம்! ஃபால்குன் பூர்ணிமா அன்று ஹோலிகா தனது காதலரை திருமணம் செய்து கொள்ளவிருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் அவர் திருமணத்திற்கு முன்பே தீக்காயங்களால் இறந்தார். இதனால் புதுமணத் தம்பதிகள் சடங்கில் பங்கேற்க கூடாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…