உத்தரபிரதேச மாநிலம் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள சுல்தான்பூரில் உள்ள கால்வாய் அருகே பொறியியல் மாணவி ஒருவர் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, 23 வயதான பிடெக் மாணவி ஒருவர் வீட்டிற்குச் செல்வதற்காக லிப்டுக்காக நின்றபோது ஒரு எஸ்யூவி காரில் வந்தவர்கள் மாணவிக்கு லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி, இந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிரைவர் மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஒரு கால்வாய் அருகே காரிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடினார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெய்சிங்பூர் வட்ட அதிகாரி பிரசாந்த் சிங் கூறுகையில், தங்களுக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதன்மை விசாரணைக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…