மூதாட்டி ஒருவர் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுகளை திருடுவதற்காக கொள்ளையர்கள் மூதாட்டியின் காலை வெட்டியுள்ள கொடுமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரங்கேறியுள்ளது.
ஜமுனா தேவி என்ற 100 வயதான மூதாட்டி தனது மகள் மற்றும் பேத்தியுடன் ஜெய்ப்பூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதத்தால் அவரது கால்களை வெட்டி, கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர். கால்கள் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த மூதாட்டி இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்துள்ளார்.
அதிகாலையில் தாக்குதல் நடந்ததால், குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்ததால், தாக்குல் நடத்தப்பட்டது யாருக்கும் தெரியவில்லை. பின்னர், விடிந்து பார்த்ததும் இரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். தற்போது மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், இந்த கொடூர திருட்டு சம்பவம் குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர், மேலும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் காலை வெட்ட பயன்படுத்திய ஆயுதம் சம்பவ இடத்திலேயே மீட்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…