நாளுக்கு நாள் கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. காவல் துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கடத்தல் செய்பவர்கள் நூதன முறையில் பொருட்களை கடத்தி செல்கின்றனர். இருப்பினும் இறுதியில் போலீஸிடம் சிக்கி தான் போவார்கள்.
அப்படியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தருமபுரி வழியாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. எனவே, கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படியாக காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி சோதனை சாவடியில், காரிமங்கலம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ மணிவண்ணன் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிசரக்கு வாகனத்தை ஒருவர் யாருக்கும் சந்தேகம் வராத மாறி ஓட்டி வந்தார். ஆனால் போலீசுக்கு அப்படி இருக்குறவங்கள பாத்தா தான் ரொம்ப சந்தேகம் வரும். அதனால் வாகனத்தை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தும் போது அவர் பெண் குரலில் பேசியுள்ளார். பிறகு அவர்கள் விசாரிக்கும் வகையில் விசாரிக்கும் போது வெளிவந்த உண்மை.
அந்த வாகனத்தை ஓட்டி வந்தது ஒரு பெண். இவர் தான் இத்தனை நாட்களாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளார். எனவே, 36 வயதாகும் ஈஸ்வரி ஆண் வேடம் அணிந்து பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு, 900 கிலோ குட்கா கடத்தி சென்றபோது கையும் களவுமாக காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…