வீதி தோறும் கடைகளை திறந்து வைத்து எல்லாரும் வாங்க சந்தோசமா போங்க...என குடிமகன்களையும் குடிமகள்களையும் வளர்த்து வருகிறது இந்த டாஸ்மாக். ஆண்களுக்கு நாங்களும் நிகரானவர்கள் என்பதை இதிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். பகல் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்னரே கடைவாசலில் வரிசையில் நின்று சரக்கு வாங்கி காலை முதலே போதையில் இருப்பதும் சாலை ஓரத்தில் மல்லாந்து கிடப்பது வாடிக்கையாகிவிட்டது.
போதையில் விதவிதமான சாகசங்கள் செய்வது, சண்டையிடுவது, போன்ற வீரதீர செயல்களில் குடிமகன்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரங்கேறியுள்ளது. இந்தனை செய்தது மது பிரியர் அல்ல மது பிரியை. போதை தலைக்கு ஏறி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் தள்ளாடிக்கொண்டு நடந்து வந்துள்ளார். அவரை பார்த்த பொதுமக்கள் என்ன நடக்க போகிறதோ என யோசித்துக்கொண்டிருக்கையில் தனது வேலையை காட்ட தொடங்கினார் அந்த மது பிரியை.
பேருந்து நிலையத்தில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்த ஆண் ஒருவரை தலையில் அடைத்து நீ...வேணா சண்டைக்கு வா என வடிவேலு அழைப்பது போல் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் முகம் சுளித்து பெண்ணை சமாதான படுத்த முயன்று தோற்றனர். இதனையடுத்து அப்பெண் போதையில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடை திறக்கும் முன்னரே சரக்கு அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…