Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Gowthami Subramani [IST]
உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?Representative Image.

World Nature Conservation Day: உலக இயற்கை பாதுகாப்பு தினமா. அது ஏன் கொண்டாடப்படுகிறது? இதனால என்ன பயன்? இத தெரிஞ்சிக்கிட்டு நம்ம என்ன பண்ண போறோம்? இப்படி ஏராளமான கேள்விகள் உங்களுக்குள் எழும். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு ஏன் நாம் சுவாசிக்கும் காற்று இல்லை என்றால் நம்மால் இருக்க முடியுமா..? அப்படி நாம் தினசரி வாழ்க்கையில் எந்த வித கஷ்டங்களும் அனுபவிக்காமல் இருக்க நமக்கு கிடைத்த வரமே இயற்கை.

உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

இயற்கை என்ற சொல்லில் ஒன்று அல்ல, இரண்டு அல்ல, ஏராளவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 28 ஆம் நாள் நாம் இந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். எல்லோருக்கும் இயற்கை வளங்கள் பாதுகாப்பை நினைவூட்டவே இன்றைய தினத்தில் இயற்கை தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், ஆரோக்கியமான சூழலைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்திலும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

என்ன பயன்

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள பொறுப்பு ஆகும். நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு சுவாசிப்பதற்குத் தேவையான மரங்கள், எந்த வித மாசுபாடும் இல்லாத இடம் போன்றவற்றை உருவாக்கித் தர வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க அப்படி பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும், அவன் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பானாயின் அனைத்து வகையான மாற்றங்களையும் நம்மால் உண்டாக்க முடியும்.

இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள்

இயற்கையைப் பாதுகாப்பது என்பது நாம் வாழும் காலம் மட்டுமல்லாமல், எதிர்காலச் சந்ததியினருக்கும் நல்ல வழியை உருவாக்கிக் கொடுப்பதாகும்.

நவீன உலகத்தில், மரங்கள் இருக்கும் இடத்தைப் பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக உள்ளது. காடுகள் அழிக்கப்படுவது, மரங்களை வெட்டுதல், மற்றும் இன்னும் பல இயற்கையை அழிக்கக் கூடியதைச் செய்து எதிர்காலச் சந்ததியினர் வாழ்வதற்கான வழியை விடாமல் தடுக்கிறோம்.

இயற்கையைப் பாதுகாக்க நடைமுறையில் நாம் செய்ய வேண்டியவை

எல்லா முறைகளுக்கும் முதல் முறையாக இருப்பது இதுவே. மரங்களை வளர்க்க வேண்டும். காடுகளை அழிப்பதும் தடுத்தல் வேண்டும்.

ஒரு முறை உபயோகத்திற்காகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தக் கூடாது.

ஆற்றல் சேமிப்பு பயன்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில், வீட்டில் LED ஒளி விளக்குகளுக்கு மாற வேண்டும். ஏனெனில் இவை குறைந்த அளவிலான ஆற்றலைப் பயன்படுத்தப்படுகின்றன.

இது போன்ற இன்னும் சில முறைகளில் நாம் இயற்கையை வளமாகப் பாதுகாக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்