Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,089.69
-68.55sensex(-0.09%)
நிஃப்டி22,196.65
-20.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

யஷ்வந்த் சின்ஹா மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!

madhankumar June 30, 2022 & 19:53 [IST]
யஷ்வந்த் சின்ஹா மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!Representative Image.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) ஆதரவு கோரினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இன்று சென்னை வந்த அவர், சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

யஷ்வந்த் சின்ஹா காங்கிரஸ் மதிமுக , சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார். இந்தச் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்