தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழக மற்றும் வடஇலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன் படி, தொடர்ச்சியாக தமிழகம், புதுவை, காரைக்காலில், இன்று முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை அநேக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…