Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

அண்ணன் உடலை 18 நாட்கள் கழித்து தோண்டி எடுத்த தம்பி..!

madhankumar June 05, 2022 & 13:03 [IST]
அண்ணன் உடலை 18 நாட்கள் கழித்து தோண்டி எடுத்த தம்பி..!Representative Image.

தனது உடன் பிறந்த அண்ணன் உடலை அது எப்படி எனக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கலாம் என கூறி 18 நாட்கள் களைத்து தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெஸ்டஸ் என்பவர் சாலை விபத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி இறந்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெஸ்டஸ் உடல் அவரது தாய் தந்தை உடல்களை அடக்கம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த கல்லறை தோட்ட நிலம் ஜெஸ்டஸின் தம்பி கிறிஸ்டோபர் பெயரில் இருந்தது. 

தனது அண்ணன் உடலை தனது இடத்தில புதைத்ததில் உடன்பாடு இல்லாத தம்பி 18 நாட்களுக்கு பின்னர் அந்த உடலை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் புதைத்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோக்களாக வெளியான நிலையில் இது தொடர்பான கிறிஸ்டோபேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன் பிறந்த அண்ணன் மீது துளியும் பாசமில்லாத இந்த தம்பியின் அரக்க குணத்தை பலரும் வசைபாடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்