திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விக்னேஷ், மருமகள் மாரியம்மாள் (வயது 26). 5 மாத கர்ப்பிணியான மாரியம்மாவுக்கு நேற்று முன் தினம் 5 ஆம் மாதம் விருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் வீட்டில் நடைபெற்றது. அப்போது 5 வகை கலவை சாதத்துடன் பிரியாணியும் பரிமாறப்பட்டது.
விருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.
மேலும், சந்துரு 10, இளரா 62, செல்வகணபதி 25, பாலாஜி 22, ராஜமாணிக்கம் 60, கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், வேலங்குடியை சேர்ந்த செல்வமுருகன் (வயது24) என்பவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…