Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பேமஸ் யூடியூபர்...பைக் சாகசத்தின் போது...விபத்துக்குள்ளாகி மரணம் | Youtuber Agastya Chauhan Accident

Priyanka Hochumin Updated:
பேமஸ் யூடியூபர்...பைக் சாகசத்தின் போது...விபத்துக்குள்ளாகி மரணம் | Youtuber Agastya Chauhan AccidentRepresentative Image.

இந்தியாவின் பிரபல பைக் ரைடர் மற்றும் யூடியூபர் அகஸ்தியா சவுகான் இன்று எதிர்பாராத விதமான விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.

டெஹ்ராடூன் பகுதியில் வசித்து வருபவர் அகஸ்தியா சவுகான். 25 வயதான இவர் பைக் மற்றும் சாகசம் மீது மிகுந்த ஆர்வமுடையவர். அதனால் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தனது பைக் சாகசங்களை பகிர்ந்துக் கொண்டு வந்துள்ளார். இவருக்கு தற்போது வரவு 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் யூடியூப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் ஆக்ரா முதல் டெல்லி வரையிலான தனது பயணத்தின் போது 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரேசிங் பைக்கில் சென்றுள்ளார். அப்போது யமுனா விரைவுச்சாலையின் 47 கிலோமீட்டர் மைல்கல் இருக்கும் இடத்தில் பைக் டிவைடரில் மோதியதால் அவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் கூறப்படுகிறது.

மிகவும் வேகமாக வந்ததால் பைக் மோதி ஹெல்மெட் உடைந்து பெரும் சேதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதனால் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். அவரின் உடலை பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்