Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

Onam Special 2023 Sweet: ஓணம் ஸ்பெஷல்... அடை பிரதமன் இப்படி செஞ்சி பாருங்க...!!

Nandhinipriya Ganeshan August 20, 2023 & 19:20 [IST]
Onam Special 2023 Sweet: ஓணம் ஸ்பெஷல்... அடை பிரதமன் இப்படி செஞ்சி பாருங்க...!!Representative Image.

Onam Special Sweet: கேரள மாநிலத்தில் ஏதாவது விஷேசம் என்றால் முதலில் செய்யப்படும் இனிப்பு அடை பிரதமன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாயாசம். ஆனால், நாம் எப்போதும் செய்யும் பாயாசங்களிலேயே வித்தியாசமானது முதன்மையானது. அதனாலையே இதற்கு அடை பிரதமன் என்று பெயர் வந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கேரள உணவு அடைபிரதமனை நம் வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்க்கலாம்.

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதங்கள்...!!

என்ன தேவை?

பச்சரிசி - 1 கப்

தேங்காய் - 2

சர்க்கரை - 1 கப்

வெல்லம் - 1/2 கிலோ

உலர் திராட்சை - 1/4 கப்

முந்திரிப் பருப்பு - 1/4 கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

நெய் தேவைக்கேற்ப

செய்வது எப்படி?

அடைமாவு தயாரித்தல்:

முதலில் அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் கொட்டி 2 மணி நேரம் காய வைக்க வேண்டும். 

பின்னர், அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் எதுவும் தெளிக்க கூடாது. இதை மெல்லிய துவாராம் உள்ள சல்லடையினை வைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளுங்கள். அடை மாவு ரெடி!

Most Read: ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூ கோலங்கள்..

அடை தயாரித்தல்:

ஒரு இட்லி பாத்திரத்தில் வேகும் அளவிற்கு நீர்விட்டு கொதிக்க விடவும். பின்பு நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவில் எலுமிச்சை அளவு மாவை வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். 

அடை நன்கு வெந்ததும் அவை மிதந்து விடும். அப்போது வெளியே எடுத்து ஆறவிடவும். ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடை ரெடி!

Most Read: அத்தப்பூ கோலம் போடுவதற்கான காரணம் இதுவா?

அடை பிரதமன் தயாரித்தல்:

இப்போது, நாம் எடுத்து வைத்துள்ள தேங்காயை உடைத்து துருவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 1/4 கப் முதல் பால், 1/2 கப் இரண்டாம் பால், 2 கப் மூன்றாம் பால் என எடுத்துக் கொள்ளவும்.

பின்பு, ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 1/4 கப் நெய் ஊற்றி தயாரித்து வைத்த அடையை பொரித்து எடுக்கவும். 

அதன்பின் மற்றொரு பாத்திரத்தில், வெல்லம், சர்க்கரை மற்றும் மூன்றாம் பால் சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, இரண்டாம் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, முதல் பாலை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

இப்போது அதில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். அவ்வளவு தான்! ருசியான அடை பிரதமன் தயார்!

இந்த குறிப்பு பிடித்திருந்தால், நீங்களும் இதை வீட்டில் செய்து பாருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்