Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image.

பிப்ரவரி மாதம் முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஒவ்வோரு நாட்களும் கொண்டாட்டத்துடன் அமையும். அதில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதலை அதிகரிக்கும் வகையில் கொண்டாடப்படும். ஆனால் அதற்கு பின்பு பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை காதல் தோல்வி அடைந்த நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்திருக்கிறது. இதனை "ஆன்டி-வேலன்டைன்ஸ் வாரம்" என்று உலக மக்கள் அனைவரும் கூறுகின்றனர். இந்த வாரத்தில் எந்தெந்த நாட்கள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

Anti-Valentine Week List

பிப்ரவரி 15 - Slap Day

பிப்ரவரி 16 - Kick Day

பிப்ரவரி 17 - Perfume Day

பிப்ரவரி 18 - Flirt Day

பிப்ரவரி 19 - Confession Day

பிப்ரவரி 20 - Missing Day

பிப்ரவரி 21 - Breakup Day  

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 15 - Slap Day

காதலர் தினத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி Slap Day கொண்டாடப்படுகிறது. இது நம்முடைய முன்னாள் காதலர், யாரால் நமக்கு மன வேதனை ஏற்பட்டது அல்லது தவறான முறையில் நம்முடன் நடந்துக் கொண்டவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. அன்று நாம் நிஜமாக அவரை கன்னத்தில் அறைய வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. அவர்கள் பற்றிய நினைவுகளை முற்றிலும் மறக்கச் செய்து நம்முடைய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வேண்டியதாக அர்த்தம்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 16 - Kick Day

காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாளாக கொண்டாடப்படுவது கிக் டே. அன்று நம்முடைய முன்னாள் காதலின் பரிசு மற்றும் நினைவுகளை அடியோடு எட்டி உதைத்து விட்டு மகிழ்ச்சியாக இருக்க நினைவூட்டும் நாள். நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கை அவர்களின் நினைவால் தடைபட்டு போகக்கூடாது என்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 17 - Perfume Day

காதல் தோல்வி அடைந்த நபர்களுக்கான நாள் தான் Perfume Day. இது ஆன்டி-வேலன்டைன்ஸ் வாரத்தின் மூன்றாம் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று நாம் நமக்கான நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும். உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை வாங்கி அடுத்த புதிய துவக்கத்தின் ஆரம்பமாக கருதுங்கள்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 18 - Flirt Day

நீண்ட நாட்காளாக ஒருவர் மீது ஒருதலை காதலுடன் இருந்தீர்கள் என்றால், தைரியத்தை வர வளைத்து இந்த Flirt Day-யின் போது ஜோடியாக ட்ரை செய்யலாம். ஏனெனில், பிப்ரவரி 18 காதலர் எதிர்ப்பு வாரத்தின் நான்காம் நாள் அதற்காகவே கொண்டாடப்படுகிறது. அல்லது நீங்கள் காதல் தோல்வி அடைந்து மன வருத்தத்தில் இருந்தால் இந்நாளில் மற்றொரு உறவை தேடி மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யலாம்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 19 - Confession Day

உங்களுக்கு காதலரிடம் ஏதேனும் உண்மையை மறைத்துக் கொண்டிருந்தால், Confession Day அன்று அதனை சொல்லி மன்னிப்பு கேளுங்கள். ஏனெனில் Confession Day நாம் பல முறை சொல்ல முயற்சித்தும் சொல்ல முடியாமல் போன உண்மைகளை அவர்களிடம் சொல்ல ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அல்லது உங்களுக்கு இந்த காதலை மேற்கொள்ள விருப்பம் இல்லை என்றால் அந்த உண்மையையும் கூறி ஒரு மனதாக பிரியும் நாளாகும்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 20 - Missing Day

உங்களுடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் நபரிடம் அவர்களை மிகவும் மிஸ் பண்ணுவதாக சொல்லும் நாள் தான் Missing Day. ஆன்டி-வேலன்டைன்ஸ் வாரத்தின் ஆறாம் நாளாக இந்த Missing Day-வை கொண்டாடுகிறோம்.

ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் கொண்டாடுவதற்கான காரணம் இது தானா? | Anti Valentine Week 2023 in TamilRepresentative Image

பிப்ரவரி 21 - Breakup Day  

இதற்கு மேல் இந்த காதலை எடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி ஒரு மனதாக பிரிய விரும்பினால் இந்த Breakup Day அன்று அதனை மேற்கொள்ளலாம். இந்த அனைத்து நாட்களையும் பார்த்துவிட்டு காதல் தோல்வியை பெரும் வலியுடன் இருக்காதீர்கள். ஒரு முடிவில் இருந்து தான் புதிய தொடக்கம் இருக்கும். அதே போல இந்த காதல் தோல்வி அடைந்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான காலத்தை நோக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள். உங்களுக்கு ஏற்ற காதல் தானாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்