சிவபெருமானின் ஆசி பெற, மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வணங்கினால் பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும். மாசி மாதத்தில் கொண்டாடப்படும் சிறப்புப் பண்டிகைகளில் ஒன்றானது சிவராத்திரி. மாசி மகா சிவராத்திரி தினத்தில், சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் இரவு முழுவதும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இந்த சிவராத்திரி தினத்தில் கடைகளில் வாங்கி இனிப்புகள் படைப்பதை விட, வீடுகளில் செய்து சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து படைப்பது நன்மையைத் தரும். இதில், சிவனுக்குப் படைக்க வேண்டிய எளிமையான இனிப்பு வகையைக் குறித்து இதில் காண்போம்.
பாதாம் அல்வா செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
சர்க்கரை - அரை கப்
பால் - 1 கப்
நெய் - 1/2 கப்
பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்து வைத்தது)
குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊற வைத்தது)
✤ முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும்.
✤ அதில், 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
✤ பிறகு நீர் கொதித்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து கரைய வைக்க வேண்டும்.
✤ இத்துடன், அரைத்து வைத்த பாதாம், பால் மற்றும் குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
✤ இவ்வாறு கிளறி விடும் போது, சற்று கெட்டியாக வரும். இதில், பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
✤ இப்படி செய்யும் போது நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சி விடும்.
✤ இவ்வாறு நெய்யானது முற்றிலும் வற்றியதும் வாணலியை இறக்கி மீதமுள்ள நெய் சேர்த்து ஒரு முறை கிளறி ஆற விட வேண்டும்.
இப்போது சூப்பரான பாதாம் அல்வா ரெடியாகி விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…