Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Banana Payasam Recipe in Tamil | தித்திக்கும் வாழைப்பழ பாயசம் செய்வது எப்படி?

Priyanka Hochumin Updated:
Banana Payasam Recipe in Tamil | தித்திக்கும் வாழைப்பழ பாயசம் செய்வது எப்படி?Representative Image.

பண்டிகை நாட்களில் ஸ்வீட் செய்து சாப்பிடுவது நம்முடைய பழக்கம். அதிலும் எப்பையும் போல பாசிப்பருப்பு பாயசம், குலாப் ஜாமுன் என்று சாப்பிட்டு போர் அடிக்குதா? இந்த புத்தாண்டில் வெறும் வாழைப்பழத்தை மட்டும் வைத்து சுவையான பாயாசம் செய்து சாப்பிடலாம். இது இனிப்பு மட்டும் இல்லது உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பாயசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பாப்போம்.

Banana Payasam Recipe in Tamil | தித்திக்கும் வாழைப்பழ பாயசம் செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4

சர்க்கரை - 100g

முழு தேங்காய் - 1

ஏலக்காய் - 5

முந்திரி பருப்பு - 25g

பேரீச்சம் பழம் - 6

நெய் - தேவையான அளவு.

Banana Payasam Recipe in Tamil | தித்திக்கும் வாழைப்பழ பாயசம் செய்வது எப்படி?Representative Image

செய்முறை:

முதலில் வாழைப் பழத்தின் தோலை உரித்து துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு முந்திரி மற்றும் பேரீச்சம் பழம் இரண்டையும் பொடியாக நறுக்கி, நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்.

பின்பு தேங்காய்யை துருவி அதனை மைய அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பாலில் ஏலக்காயை பொடியாக்கி கலந்துக்கவும்.

இறுதியாக இதில் வாழைப்பழம், முந்திரி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை போட்டு கலந்து விடவும். அடுத்து அதனை பிரிட்ஜில் வைத்து குளு குளுன்னு குடும்பத்தோட சாப்பிடுங்கள்.

உங்களுக்கு வேண்டும் என்றால் வாழைப்பழத்தை நசுக்கியும் கூட சேர்த்துக்கொள்ளலாம். உங்களது விருப்பம் தான்.

அவ்ளோ தான் 5 நிமிடத்தில் சுவையான வாழைப்பழம் பாயாசம் ரெடி. நல்ல ஜிலுன்னு பாயாசம் செஞ்சி சாப்பிடலாம் இந்த புத்தாண்டில். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்