டயபெட்டிஸ் நோயாளிகளுக்கு, ஏராளமான உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த வகையில், வெந்தயமும் ஒரு சிறந்த தீர்வாக சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதனைக் கட்டுப்படுத்த நாள்தோறும் வெந்தய டீ அருந்துவது நல்லது. இது சிறந்த ஆரோக்கியமான பலன்களைத் தரும்.
நம் அனைவருமே, கால நிலைக்கு ஏற்றவாறு உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது நல்லது. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோய் என்கிற நீரிழவு நோயால், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடுத்த இழப்பு என்னவென்றால், நீரிழவு நோய் ஒழிக்க முடியாத ஒன்றாகும். எனவே, இரத்த சர்க்கரையின் அளவை சரியான அளவை சமமாக வைத்திருப்பது நல்லது. அதே போல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கோடை காலத்தை ஒப்பிடும் போது, குளிர் காலத்தில் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது சவாலானது ஆகும். குளிர்ச்சியான வானிலையில், ஐஸ்கிரீம், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவற்றை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு கேடு தருபவையாக அமையும். இவை, வளர்சிதை மாற்றத்தில் விளைவை ஏற்படுத்துமாறு அமையும். உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அதிகப்படியான ஏற்றமும், இறக்கமும் ஆபத்தையே ஏற்படுத்துமாறு அமைகிறது. அதன் படி, அன்றாட உணவில் நாம் சேர்க்க வேண்டிய சில முக்கிய உணவுப் பொருளான, இதற்கு தீர்வு தருவதாக அமைகிறது.
நீரிழவு நோய்க்கு தீர்வாக வெந்தயம் உதவுகிறது. இதற்கு, வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இந்த நார்ச்சத்துகள் செரிமான செயல்முறையை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்துகிறது. அதன் படி, தினந்தோறும் 10 கிராம் அளவிலான வெந்தயத்தை ஊறவைத்து உண்பதன் மூலம், 2-ம் வகை நீரிழவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. இன்சுலின் எதிர்ப்பைச் சமாளிக்க உதவும், வெந்தயமானது ஆரோக்கியப் பலன்களை அளிக்கக் கூடியதாகவும், செயல்திறன் உடையதாகவும் அமைகிறது. அது மட்டுமில்லாமல், குளிர்காலத்தில் உள்ளிருந்து உடலை சூடேற்ற, மற்றும் ஊட்டச்சத்துகளை அளிக்க உதவுகிறது. வெந்தயத்தை அப்படியே ஊற வைத்து, தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்தலாம் அல்லது வெந்தய டீ தயாரித்து அருந்தலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த ஒரு தீர்வாக அமையக் கூடிய வெந்தய டீயை வீட்டிலேயே எவ்வாறு எளிமையாகத் தயார் செய்யலாம். இதில், வெந்தய டீ தயார் செய்யும் முறைகளைப் பற்றிக் காண்போம்.
✤ முதலில் வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
✤ இதில் இனிப்புக்காக சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன், வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய டீ தூள் மற்றும் பிற மூலிகைகளைச் சேர்க்கலாம்.
✤ இவை அனைத்தையும் சேர்த்து மூடி வைத்து, மூன்று நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும்,
✤ அதன் பின், இதனை வடிகட்டி குடிக்கலாம்.
இவ்வாறு வெந்தய டீ தயாரித்து தினசரி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாக உதவுகிறது. குறிப்பாக, நீரிழவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…