தேவையான பொருட்கள்:
நட்சத்திர பூ - 4
கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டிஸ்பூன்
கிராம்பு - 15
பிரியாணி இலை - 6
பட்டை - 5
பச்சை ஏலக்காய் - 15
ஜாதிக்காய் - 3
காய்ந்த மிளகாய் - 7
இலவங்கப்பட்டை - 2
செய்முறை:
முதலில் ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்யவும். அதில், எடுத்து வைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அவ்வளவு தான் கமகமக்கும் பிரியாணி மசாலா தயார்.
ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டீஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு 1 டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு 1 டீஸ்பூன் அளவும் சேர்த்துக் கொள்ளலாம். அதுவே குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்கால் டேபிள் ஸ்பூன் சேர்த்தால் போதுமானது.
டிப்ஸ்:
எப்போதும் மசாலா பொடி அரைக்கும்போது புதிய மசாலா பொருட்களை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் மசாலா நீண்ட நாட்கள் நீடிக்காது.
மேலும், அரைத்த மசாலா தூளை காற்று புகாத கண்ட்டைநர் போட்டு, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் போது மூன்று மாதங்கள் நன்றாக இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…