Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 09:00 [IST]
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..Representative Image.

ஆன்மீக ரீதியாக

பிரம்மனின் முகூர்த்தத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரத்தில் தான் பிரம்மா மனிதர்களை படைக்கும் வேலைகளை செய்வாராம். ஒரு மனிதன் அந்த நேரத்தில் எழுகிறான் என்றால்,  அந்த நாள் முழுவதும் எந்தவொரு தோசமும் கிடையாதாம். அதனால் தான் எந்தவொரு சுபநிகழ்ச்சிகளையுமே பிரம்ம முகூர்த்தத்தில் செய்வார்கள், அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக. அப்படி பிரம்ம முகூர்த்தில் எந்த சுபகாரியங்களையும் செய்துமுடித்துவிட்டால், அன்றைய நாளில் யோகம், திதி, நாள், நட்சத்திரம் என எதுவுமே பார்க்கவேண்டியதில்லை. அந்தளவிற்கு நல்ல பலன்களை கொடுக்கவல்லது இந்த பிரம்ம முகூர்த்தம். ஆன்மீக ரீதியாக பார்க்கும்போது இது தான் காரணம். 

இளமையை மீட்டு தரும் உருளைக்கிழங்கு...

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..Representative Image

அறிவியல் ரீதியாக

பொதுவாக, இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் காஸ்மிக் ஆற்றல் அதிகளவில் பூமிக்கு வருகிறது. அந்த நேரத்தில் நாம் எழுந்திருக்கும்போது, காஸ்மிக் ஆற்றலை நம் உடல் பெறுவதால், நம்முடைய மனமானது மிகவும் அமைதியாக இருக்கும். அதனால் தான் நம் முன்னோர் அதிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி கோலமிடுவார்கள். பெண்கள் அந்த நேரத்தில் எழுந்து அந்த ஆற்றலை பெற வேண்டும் என்பதற்காகவே கோலமிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால், இந்த காலத்தில் நாம் எழுந்திருப்பதற்கே காலை 7 மணியாகிவிடுகிறது. அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது அதிகாலை 6 மணிக்கு முன்பு தான் நமது மூளையில் மெலட்டோன் என்று சொல்லக்கூடிய சுரப்பி சுரக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் விழிப்புணர்வு நிலையில் இருக்கும்போது ஏராளமான நன்மைகளை நம் உடல் பெறுகிறது. 

பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..Representative Image

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் ஏற்படும் நன்மைகள்:

பிரம்ம என்றால் அறிவு. முகூர்த்தம் என்றால் காலம். நமது அறிவை உணர்வதற்கு சிறந்த காலமே பிரம்ம முகூர்த்தம். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக சரியாக ஒன்றரை மணி நேரமே பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படுகிறது. 

- இந்தநேரத்தில் மெலடோனின் அதிகளவில் சுரக்கப்பதால் அறிவாற்றல் மேம்படும். அதுமட்டுமல்லாமல்,  மன அழுத்தத்தை எதிர்க்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகாலை நேரங்களின் அதிகமாகும். இதனால், உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கும்.

- பொதுவாக ஏற்படும் பதட்டம், எரிச்சல், எதிர்மறை தூண்டுதல்கள் மற்றும் அவமதிப்பு ஆகிய உணர்வுகளை விரட்டி நேர்மறையான அணுகுமுறையை கொள்வதற்கு இந்த நேர விழிப்பு உதவுகிறது. 

- இந்தநேரத்தில் விழித்து யோகா, தியானம் மற்றும் சில விஷயங்களை மேற்கொள்ளலாம். சூரிய உதயத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகிறது. சூரிய ஒளி நேரடியாக சருமத்தின் மீது படும்போது எலும்புகளை வலுப்படுத்துவது முதல் புற்றுநோய் வராமலும் தடுக்கச் செய்கிறது. 

- நமது உடலில் சூரியன் உதிக்கும் நேரம் மற்றும் மறையும் நேரத்தில் உண்டாகும் சரும மாற்றங்கள் நன்மை தரக்கூடியது. சருமம் ஆன்டி- ஏஜிங் விளைவுகளை கட்டுப்படுத்த இவை உதவுகிறது. குறிப்பாக முதுமை தொடர்பான அறிகுறிகள் மற்றும் உடல்நல அபாயங்களை இது தாமதப்படுத்துகின்றது.

- உடலுக்கு தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் உறிஞ்சும் திறன் அதிகரிக்க உடலுக்கு உதவுகிறது. இரத்தத்தின் பி.எச். அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. வலி, புண், பிடிப்புகளை நீக்குகிறது.

சாப்பிட்டதும் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. ஆபத்து உங்களுக்கே..

பிரம்ம முகூர்த்ததில் செய்யக்கூடாதவை:

பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிடக்கூடாது.

அதிக மன அழுத்தம் நிறைந்த செயல்களை செய்யக்கூடது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்