Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Bread Cookies Recipe Tamil: வீட்ல மீந்து போன பிரட் இருக்கா...அத வச்சி குழந்தைகளுக்கு பிடித்த மாறி...இப்படி குக்கீஸ் செய்யலாம்!

Priyanka Hochumin August 06, 2022 & 16:30 [IST]
Bread Cookies Recipe Tamil: வீட்ல மீந்து போன பிரட் இருக்கா...அத வச்சி குழந்தைகளுக்கு பிடித்த மாறி...இப்படி குக்கீஸ் செய்யலாம்!Representative Image.

Bread Cookies Recipe Tamil: நமக்கு மதிய உணவு முடிந்த பிறகு அடுத்து இரவு உணவு சாப்பிடுவதற்கு அதிக நேரம் உள்ளது. இதற்கு இடையில் வெறும் ஒரு டம்ளர் டீ அல்லது பால் குடிப்பது பெரிதாக பசிக் கட்டாது. ஈவினிங் ஸ்னாக்ஸ் ஏதாவது சாப்பிட்டு டீயோ பாலோ குடிச்சா எப்படி இருக்கு. சும்மா அருமையா இருக்கும்! ஆனா எப்பையும் போல போண்டா, பஜ்ஜின்னு சாப்பிடாம ஹெல்த்தியா எதாவது சாப்பிட கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும். இப்படி நினைக்கிறவங்களுக்கு ஏற்ற ரெசிப்பிய தான் இந்த பதிவில் பார்க்கப்போறீங்க. வீட்ல மீந்து போன பிரட் இருக்கா? அதை வச்சி சூப்பரான குக்கீஸ் பண்ணலாம் வாங்க.    

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்

பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம்

சர்க்கரை - 3/4 கப்

வெண்ணிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்

முட்டை - 1

பிரட் தூள்

சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப்

நறுக்கிய வால்நட்ஸ் - 1/2 கப்

செய்முறை

முதலில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும். ஒருவேளை மைதா வேண்டாம் என்பவர்கள் அதற்கு பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தலாம்.

பிறகு நார்மல் பிரட் அல்லது கோதுமை பிரட் உங்களுக்கு எது பிடிக்கிதோ அதில் 6 பிரட்டை நன்றாக டோஸ்ட் செய்து ஆறவிடவும். பின்பு அதனை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைக்கவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை ஒன்றாக போட்டு பீட்டர் பயன்படுத்தி நன்கு பீட் செய்யவும். இதில் வெள்ளை சர்க்கரை பிடிக்காதவர்கள் நாட்டு சர்க்கரையையும் பயன்படுத்தலாம்.

அவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் முட்டையை சேர்த்து பீட் செய்யவும். முட்டையை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பால் அல்லது கிரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்கு பிறகு மைதா கலவை மற்றும் பிரட் தூள்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட் (அடகுவது நன்கு கலக்கவும்) செய்யவும்.

இறுதியாக நம்மிடம் இருக்கும் சாக்லேட் சிப்ஸ் மற்றும் நறுக்கிய வால்நட்ஸ்களை அத்துடன் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்யவும். வால்நட் எனக்கு அலர்ஜி என்று இருப்பவர்கள் முந்திரி, பாதம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்பொழுது அந்த கலவையை உங்களுக்கு பிடித்த வடிவில் உருண்டை பிடித்துக்கொள்ளவும். Oven-ஐ 180 டிகிரி அளவில் 15 நிமிடம் நன்றாக சூடாக்கவும். அதற்கு பின்பு 180 டிகிரியில் 20 நிமிடம் இந்த குக்கீஸ்களை பேக் செய்யுங்கள்.

அவ்ளோ தான் சுவையான மற்றும் ஹெல்த்தியான குக்கீஸ் ரெடி. இதனை ஒரு ஏர்-டைட் கண்டைனரில் வைத்து பதப்படுத்திக்கலாம். மாலை நேரத்தில் சூடான டீ உடன் இந்த குக்கீஸ் சாப்பிடும் பொழுது ப்பா! என்ன காம்பினேஷன் என்ற மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு தோன்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இது நிச்சயம் உங்களுடைய குழந்தைகளுக்கு பிடிக்கும் ஒரு முறையாவது ட்ரை பண்ணி பாருங்க.

Bread Cookies Recipe Tamil, chocolate chips cookies recipe in tamil, how to make cookies at home, bread recipes, bread flour cookies recipe, bread cookies soft, bread cookies, bread cookies with cream, cookies bread flour, recipe of cookies.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்