அனைவராலும் விரும்பப்படும் கனியாக விளங்குவது நெல்லிக்காய். மூலிகை பொருளாகவும், உடல் நலத்திற்கு நன்மை தருபவையாகவும் அமைகிறது. இது போல எண்ணற்ற பயன்கள் கொண்ட கனிகள் நிறைய உள்ளன. ஆனால், எத்தனை நன்மைகள் இருப்பினும், அவற்றை உண்பதெற்கன நேரம் உண்டு. உடலுக்கு நன்மை தரும் கனிகள் அனைத்தையும் எல்லா நேரங்களிலும் சாப்பிடக் கூடாது. கால நிலைகளுக்கு ஏற்ற சாப்பிடுவதே நல்ல பயன்களைத் தரும். அந்த வகையில் தற்போது அருமருந்தாக விளங்கும் நெல்லிக்காய் கனியை இரவில் சாப்பிடலாமா என்பது பற்றி இதில் காணலாம்.
நெல்லிக்காய் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் என்று கூறுவர். இது, பழமொழியாகக் கூறப்பட்டாலும், எத்தனை கனிகள் இருந்திருப்பினும், அதியமான் நெல்லிக்கனியை கொடுத்ததற்கு காரணம் உண்டு. அதாவது ஒளவை நெடுநாள் வாழ்வதற்க்கே ஒளவைக்கு அதியமான் நெல்லிக்கனியைத் தந்ததாகக் கூறப்படுகிறது. இது புராணங்களில் கூறப்பட்டவையாக இருந்தாழும், இது ஒரு வகையில் உண்மை என்றே கூறலாம். ஏனெனில், நெல்லிக்கனியானது நீண்ட நாள் நம்மை வாழ வைக்கக் கூடிய அருமருந்தாகவே உள்ளது. ஆனால், இந்தக் கனியை நாம் இரவில் உண்ணக்கூடாது எனக் கூறுவர். அதற்கு என்ன காரணங்கள் என்பதை இதில் காணலாம்.
நெல்லிக்காய், உடலுக்குப் பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. இது வைட்டமின் சி-ல் உள்ளது போல, கண்களுக்குத் தெளிவைக் கொடுக்கிறது. அதே போல, சகல வயதினருக்கும் பல்வேறு வழிகளில் நிவாரணங்களைத் தர உள்ளது.
நெல்லிக்காய் ஆனது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நெல்லிக்காய் உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து, உடல் செல்களை நன்கு செயல்படுத்த உதவுகிறது.
பொதுவாக கொழுப்புச் சத்து நம் உடலுக்கு தேவையான ஒன்று. அதே சமயம், அதிகப்படியான கொழுப்புச் சத்துக்கள் சேர்வதும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்து. இது இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.
மேலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் கொழுப்புகளை சுலபமாகக் கரைத்து விடும். இதன் மூலம், மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
இப்படி அதீத பயன்களைத் தரும் நெல்லிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால், புத்தி, வீர்யம், மற்றும் தேஜஸ் குறைந்து விடும் எனவும் கூறப்படுகிறது. இதனால், இரவில் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது எனக் கூறுவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…