கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்பது பெண் மற்றும் ஆண் இருவரையும் சமமாக பாதிக்கும் ஒரு பிரச்சனை தான். இருப்பினும், கருத்தரிக்க முடியாமல் இருப்பது என்பது ஒரு நோய் கிடையாது. ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த பிரச்சனை சிலருக்கு பிறக்கும்போதே இருக்கலாம். சிலருக்கு பிற்காலத்தில் கூட ஏற்படலாம்.
இதற்கு வாழ்க்கை முறையும் ஒரு காரணியாக இருக்கலாம்: மன அழுத்தம், உடல் பருமன், ஆல்கஹால் மற்றும் காபி அதிகப்படியாக உட்கொள்வது மற்றும் புகைபிடித்தல் ஆகியவை கருவுறுதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...
விந்தணுக்கள், மரபணு குறைபாடுகள், நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அல்லது கிளமிடியா, கொனோரியா, சளி அல்லது எச்ஐவி போன்ற நோய்த்தொற்றுகள் காரணமாக அசாதாரண விந்து உற்பத்தி நிகழலாம். மேலும், விந்தணுக்களில் விரிவாக்கப்பட்ட நரம்புகள் கூட (வெரிகோசெல்) விந்தணுவின் தரத்தை பாதிக்கலாம்.
முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற பாலியல் பிரச்சனைகளால் விந்தணுவை விநியோகிப்பதில் உள்ள பிரச்சனைகள்; சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற சில மரபணு நோய்கள்; விந்தணுவில் அடைப்பு போன்ற கட்டமைப்பு பிரச்சனைகள்; அல்லது இனப்பெருக்க உறுப்புகளுக்கு பாதிப்பு அல்லது காயம் போன்றவையும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இரசாயனங்கள், மற்றும் கதிர்வீச்சு போன்ற சில சுற்றுச்சூழல் காரணிகளின் அதிகப்படியான வெளிப்பாடு. புகைப்பிடித்தல், ஆல்கஹால், மரிஜுவானா, அனபோலிக் ஸ்டெராய்டுகள், பாக்டீரியா தொற்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க உட்கொள்ளும் மருந்துகளும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல், அடிக்கடி வெந்நீரில் குளிப்பது, குடிப்பது போன்றவையும் உடல் வெப்பநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.
கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி உள்ளிட்ட புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சை தொடர்பான பாதிப்புகளும் விந்தணு உற்பத்தியை கடுமையாக பாதிக்கின்றது.
பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் இத மட்டும் ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...
அதிக தைராய்டு ஹார்மோன் (ஹைப்பர் தைராய்டிசம்) அல்லது மிகக் குறைவான தைராய்டு ஹார்மோன் (ஹைப்போ தைராய்டிசம்) போன்றவை பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
அண்டவிடுப்பின் கோளாறுகள் (Ovulation disorders) மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி ஆகியவையும் கருப்பையில் இருந்து முட்டைகளை வெளியிடுவதை பாதிக்கின்றது.
ஹைப்பர்ப்ரோலாக்டினீமியா - இது உடலில் அதிகமாக புரோலேக்டின் கொண்டிருக்கும் ஒரு நிலை - தாய்ப்பாலின் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன் இதுவும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
கருப்பைச் சுவரில் உள்ள கட்டிகள் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள்) ஃபலோபியன் குழாய்களைத் தடுப்பதன் மூலமும் அல்லது கருவுற்ற முட்டையை கருப்பையில் பொருத்துவதை நிறுத்துவதன் மூலமும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஃபலோபியன் குழாய் சேதம் அல்லது அடைப்பு, பெரும்பாலும் ஃபலோபியன் குழாயின் வீக்கத்தால் (சல்பிங்கிடிஸ்) ஏற்படுகிறது. இது இடுப்பு அழற்சி நோயின் விளைவாக ஏற்படலாம், இது பொதுவாக பாலியல் ரீதியாக பரவும் தொற்று, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது ஒட்டுதல்களால் ஏற்படுகிறது.
கருப்பைக்கு வெளியே எண்டோமெட்ரியல் திசு வளரும் போது ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸும் கருப்பைகள், கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களின் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.
சில புற்றுநோய்கள் - குறிப்பாக இனப்பெருக்க புற்றுநோய்கள் - பெரும்பாலும் பெண் கருவுறுதலை பாதிக்கின்றன. மேலும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி இரண்டும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…