Causes of Tobacco in Tamil: புகையிலை பல நூற்றாண்டுகளாக இருந்தே பலரின் உயிரை பறித்து வருகிறது. இது உடலுக்கு கேடு என தெரிந்தும் பலர் இதை பயன்படுத்தி வருகின்றனர். புகையிலை பல வடிவங்களில் விற்கப்படுகிறது. உதராணமாக, சிகரெட், பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் பல.. பொதுவாக புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்காதவர்களை விட 10 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கின்றனர். இந்த உலகில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த புகையிலைக்கு அடிமையாகியுள்ளனர். புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் நிச்சயம் என்று நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், அதைவிட மோசமான நோய்களை ஏற்படுத்தும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இப்போது புகையிலை பயன்படுத்துவதால் என்னென்ன நோய்கள் வருகின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.
புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு
புகைப்பிடிப்பதால் உடலின் மிகவும் முக்கிய பகுதியான நுரையீரல் தான் முதலில் பாதிப்படைகிறது. இது புற்றுநோய் முதல் பல மோசமான நோய்களை ஏற்படுத்தக் கூடியது. 16 மில்லியன் அமெரிக்கர்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோயுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் சுமார் 480,000 பேர் இறக்கின்றனர். அதாவது, புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவு என்பது அவர்களை விட அவர்களால் வெளியிடப்படும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கே பாதிப்பு அதிகம். இதனால், தான் பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. இதனால், எந்த தவறும் செய்யாத சிறு குழந்தைகளும் பாதிப்படைவது தான் மனதை வருத்துகிறது.
புகையிலையின் மற்ற வடிவங்கள் பாதுகாப்பானதா?
சிகரெட் பிடிப்பதை விட, சுருட்டு பிடிப்பது பாதுகாப்பானது என்று பலர் நம்புகின்றனர். ஆனால், சுருட்டு பிடிப்பதும் புற்றுநோய் உட்பட, பல நோய்களையும் ஏற்படுத்தும். மேலும், சிகரெட்டை விட மெல்லும் புகையிலை (ஹான்ஸ்) மற்றும் புகையற்ற புகையிலை பொருட்கள் தான் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில், புகையில்லா புகையிலை பொருட்களில் கிட்டத்தட்ட 30 புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உள்ளன.
புகையிலையால் உண்டாகும் பாதிப்புகள்:
புகையிலையை பயன்படுத்துவது உங்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிப்படையச் செய்கிறது. புகைபிடிக்கும் புகையிலை நிகோடினை மட்டுமல்ல, உங்கள் நுரையீரல், இரத்தம் மற்றும் உறுப்புகளில் ஏராளமான புற்றுநோய்களை உண்டாக்கும் 5,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் இருக்கின்றன. ஆனால், அதைவிட மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தான்.
கர்ப்பிணி பெண்கள்:
புகையிலை பயன்படுத்தும் கர்ப்பிணி பெண்கள் தாங்கள் பாதிப்படைவதோடு, தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மோசமான வியாதிகளை பரப்பி வருகின்றன. அவர்கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு வரும்,
மெல்லும் புகையிலையால் வரும் ஆபத்து:
புகைபிடிக்காத புகையிலை நிகோடின் பழக்கத்தை ஏற்படுத்தும். மெல்லும் புகையிலையை பயன்படுத்துபவர்களுக்கு வாய், உணவுக்குழாய் மற்றும் கணையத்தில் புற்றுநோய்கள் வரலாம். மேலும் மெல்லும் புகையிலை ஈறு நோய், பல் சிதைவு மற்றும் பல் இழப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.
புகைப்பிடிப்பதால் வரும் நோய்கள்:
புகைபிடித்தல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (chronic obstructive pulmonary disease) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது, இதில் எம்பிஸிமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவையும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், புகைபிடித்தல் காசநோய், சில கண் நோய்கள் மற்றும் முடக்கு வாதம் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கான ஆபத்தையும் அதிகரிக்கிறது.
புகையை சுவாசிப்பதால் ஏற்படும் நோய்கள்:
புகைப்பிடிப்பவர்களை விட அதை சுவாசிப்பதால், பெரியவர்களுக்கு பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கரோனரி இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதேபோல், குழந்தைகளுக்கு கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், காது சம்பந்த நோய்கள், மிகவும் கடுமையான ஆஸ்துமா, சுவாச அறிகுறிகள் மற்றும் நுரையீரல் வளர்ச்சி குறைவது போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் புகைப்படிக்காமல், அதை சுவாசிப்பதால் சுமார் 41,000 பெரியவர்களும், 400 குழந்தைகளும் இறக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…