Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையுடன் செட்டிநாடு காளான் குழம்பு.! இப்படி செய்யுங்க.. | Chettinad Mushroom Kulambu in Tamil

Gowthami Subramani Updated:
கறிக்குழம்பை மிஞ்சும் சுவையுடன் செட்டிநாடு காளான் குழம்பு.! இப்படி செய்யுங்க.. | Chettinad Mushroom Kulambu in TamilRepresentative Image.

பொதுவாக காளான் ஆனது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். அனைத்து வகையான காளான்களிலுமே கொழுப்பு, கலோரிகள் குறைவாகவே உள்ளன. மேலும், இவை நிறைவான அளவில் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
 

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையுடன் செட்டிநாடு காளான் குழம்பு.! இப்படி செய்யுங்க.. | Chettinad Mushroom Kulambu in TamilRepresentative Image

சைவம், அசைவம் என இரண்டையும் சாப்பிடுபவர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும் ஒன்றாகும். பெரும்பாலும், சைவப் பிரியர்களுக்குக் காளான் தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவர். அசைவம் மட்டுமல்ல, சைவத்தையும் நாம் விதவிதமாகச் செய்யலாம். அந்த வகையில், செட்டிநாடு காளான் குழம்பை எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம். 
 

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையுடன் செட்டிநாடு காளான் குழம்பு.! இப்படி செய்யுங்க.. | Chettinad Mushroom Kulambu in TamilRepresentative Image

தேவையான பொருள்கள்

காளான் - 300 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 3/4 ஸ்பூன்
பட்டை - 2 இன்ச் துண்டு
சோம்பு - 1/2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
வெங்காயம் - 2
கொத்தமல்லி விதை (தனியா) - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 அல்லது காரத்துக்கு ஏற்றாற் போல
தேங்காய் - கால் மூடி
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையுடன் செட்டிநாடு காளான் குழம்பு.! இப்படி செய்யுங்க.. | Chettinad Mushroom Kulambu in TamilRepresentative Image

செய்முறை

✤ முதலில் காளானை நன்கு கழுவி நீரில்லாமல் துடைத்துக் கொள்ளவும். அதனை பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ வெங்காயம் மற்றும் தக்காளியை தலா 1 வீதம் எடுத்துக் கொண்டு அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

✤ பின், கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, தனியா, பட்டை, சீரகம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்றவற்றைச் சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும்.

✤ பிறகு, அத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.

✤ இவ்வாறு வதங்கிய பிறகு, ஆறியதும் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

✤ பிறகு, அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு போட்டு தாளித்துப் பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

✤ அத்துடன், அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

✤ இதில் குழம்பு நன்றாக கொதி வரும். அதன் பிறகு, காளான் துண்டுகளைச் சேர்க்கவும். இவற்றை மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் இழுத்து குழம்பு திக்கான பதத்திற்கு வந்தவுடன், எண்ணெய் தனியாக பிரிக்க ஆரம்பிக்கும்.

✤ பிறகு அத்துடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த கறிக்குழம்பு சுவையுடனும், மணமுடனும் கூடிய காளான் குழம்பு தயாராகி விட்டது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்