Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image.

இவ்வுலகில் மிக ரொமான்டிக்கான விஷயம் என்று சொன்னாலே அது காதல் தான். இப்படிப்பட்ட ஒரு அழகான விஷயத்தை கொண்டாடவே ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர்களுக்கு காதலர் தினத்தில் மட்டும் கொண்டாட்டம் இல்லைங்க, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில், காதலர் வாரத்தில் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுவது தான் இந்த "சாக்லேட் டே", இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படுகிறது. இன்று வரையும் இது பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, நாம் விரும்பும் ஒருவருக்கு அதை பரிசாகக் கொடுப்பதும் பரிமாறிக்கொள்வதும் வழக்கம். ஆனால், காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 7 நாட்களில் மூன்றாவது நாளில் வரும் சாக்லேட் டே மிகவும் இனிமையான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனென்றால் இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவருக்கு சாக்லேட்களை பரிசாக கொடுத்து தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துகிறார்கள். 

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

சாக்லேட் கொடுப்பதில் இருக்கும் ரகசியம்:

இந்த நாளில் சாக்லேட் கொடுத்து காதலை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? சாக்லேட் என்றாலே பெரியவர்கள் கூட குழந்தைகளாகிவிடுகிறார்கள். அந்த அளவிற்கு சாக்லேட்டின் சுவை அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. சாக்லேட்டில் "ட்ரைப்டோஃபன்" என்ற மூலப்பொருள் அதிகமாக இருக்கிறது. இது நம் உடலில் உற்சாகத்தை உண்டாக்கும் செரோடின் என்ற அமிலத்தை சுரக்கச் செய்கிறது. மேலும், சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் என்ற மூலப்பொருள் ஒரு ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. இதனால் தான் காதலர் தினத்திலும், சாக்லேட் தினத்திலும் சாக்லேட்டை பரிமாறிக் கொள்கிறார்கள். நீங்களும் உங்கள் காதலியிடமோ அல்லது காதலனிடமோ ஒரு முத்தம் வேண்டுமென்றால் ஒரு பெரிய சாக்லேட்டை வாங்கிக் கொடுங்கள்.

உங்க லவ்வருக்கு எப்படி சாக்லேட் வாங்கிக்கொடுத்தால் இம்ப்ரஸ் ஆவார்கள் என்று இப்போதிலிருந்தே இணையத்தை அலாச ஆரம்பித்திருப்பீர்கள். இதோ சில யோசனைகளை பகிர்ந்துள்ளோம். இதை சாக்லேட் டேயில் தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. லவ்வர்ஸ் டே வரையிலும் கொடுக்கலாம். நிச்சயம் அற்புதமான ஒரு பரிசாக இருக்கும்.

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

சாக்லேட் பூங்கொத்து [Chocolate Bouquet]

உங்க லவ்வருக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினால், அவர்களுக்கு சாக்லேட் பூங்கொத்தை பரிசாக கொடுங்கள். இதை எப்படி வாங்குவது என்று தானே உங்க கேள்வி? ரொம்பவே ஈஸி. உங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் பூக்கடைக்காரர் மூலமே இந்த சாக்லேட் பூங்கொத்தை ரெடி செய்துவிடலாம். அதாவது, உங்க லவ்வருக்கு பிடித்த சாக்லேட்களை வாங்கி பூக்காரரிடம் கொடுத்து பூவுடன் சேர்த்து சாக்லேட்டையும் அழகாக வடிவமைக்க சொல்லுங்கள். இது கஷ்டம் என்று நினைத்தால் ஆன்லைனில் கம்மி விலையில் கிடைக்கிறது. 

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

சாக்லேட் பார்ஸ்/பாக்ஸ் [Chocolate Bars Or Boxes]

அருகில் இருக்கும் பேக்கரிகளுக்கு சென்று உங்க லவ்வருக்கு பிடித்த சாக்லேட்களை வாங்கிக்கொடுத்து சாக்லேட் பார்ஸ் அல்லது பாக்ஸ் அலங்கரிக்க சொல்லலாம். அதோடு உங்க லவ்வரின் பெயரையும் அதில் பொறிக்க சொல்லுங்கள். இந்த சமயத்தில் அவர்களே ரெடிமேடாக வைத்திருப்பார்கள் அதில் ஒன்றைக்கூட வாங்கிக்கொடுக்கலாம். ஆன்லைனிலும் குறைவான விலையில் அழகான சாக்லேட் பார்ஸ்/பாக்ஸ் கிடைக்கிறது.

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

ஹோம்மேட் சாக்லேட் [Homemade Chocolate Treats]

உங்க லவ்வர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்க வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்களை [Homemade Chocolates] வாங்கிக் கொடுக்கலாம். நீங்களே உங்க கையால் செய்த சாக்லேட் கேக் அல்லது பிரவுனிகளை செய்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பாக்ஸில் போட்டு, ஒரு அழகான கவிதையை எழுதி அவருக்கு சர்ப்ரைச் கிஃப்ட் பண்ணுங்க. இதன் மூலம் நீங்க நிச்சயமாக அவர்களின் இதயத்தை வென்றுவிடலாம். ஆனால் இதற்கு நேரமில்லை என்று வருத்தப்பட்டால் ஆன்லைனிலும் ஹோம்மேட் கேக்ஸ் கிடைக்கிறது, அதை கூட வாங்கிக் கொடுத்து அசத்துங்க.

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

சாக்லேட் [Chocolate Grazing Platter]

உங்க கணவர் அல்லது காதலர் சாக்லேட் பிரியராக இருந்தால், அவர்களுக்கு என்னெல்லாம் பிடிக்குமே அதை வாங்கி grazing platter ல் அமைத்து அதை அவர்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணுங்க. மேலும் அதில் நீங்க சொல்ல நினைப்பதை ஒரு கடிதத்தில் எழுதி அதோடு வைத்துவிடுங்கள். அதை அவர்கள் எடுத்துப்பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள். இப்படியும் காதலை வெளிப்படுத்தலாம் அன்பர்களே.

காதலர் தினத்தில் சாக்லேட் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. | Chocolate Day 2023 Gift Ideas in TamilRepresentative Image

ஹார்ட் சேப் சாக்லேட் பாக்ஸ் [Heart-Shaped Chocolate Box]

காதல் என்றாலே ஹார்ட் தான். எனவே, ஹார்ட் சேப் சாக்லேட் பாக்ஸை வாங்கி, அதில் ஒரு கடிதத்தை வைத்து அவர்களுக்கு பரிசாக கொடுங்கள். இதன் மூலம் உங்களுக்காக இருந்ததற்காக அல்லது உங்கள் உலகத்தை ஒரு அற்புதமான இடமாக மாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம். ஹார்ட் சேப் சாக்லேட் பாக்ஸ் அமேசானில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்