Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Sitaphal Ice Cream | சுவையான சீதாப்பழத்தை வைத்து ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க...!

Nandhinipriya Ganeshan May 08, 2022 & 12:05 [IST]
Sitaphal Ice Cream | சுவையான சீதாப்பழத்தை வைத்து ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க...!Representative Image.

Sitaphal Ice Cream: ஸ்வீட் சாப்பிட்டால் உடல் எடை கூடி விடும், கொழுப்பு சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால், ஸ்வீட்டுக்கு இணையான சுவையும், அற்புதமான நன்மைகளை கொண்ட சீதாப்பழம் அந்த பயத்தை அடியோடு விரட்டுகிறது. நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழத்தை ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைப்பார்கள். 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இப்போது இந்த பழத்தை வைத்து டேஸ்ட்டான ஐஸ்கிரீம் எப்படி செய்வது ? வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1

விதை நீக்கிய சீதாப்பழம் - முக்கால் கப்

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பால் - 2 கப்

ஃபிரஷ் கிரீம் - 100 கிராம்

பால் பவுடர் - 1 கப்

செய்முறை:

முதலில், அனைத்து பொருட்களையும் பிளெண்டரில் அரை கப் சீதாப்பழத்துடன் சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்.

பின்னர், மீதமுள்ள பழத்தை போட்டு நன்கு அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை ஃபாயில் பேப்பரால் மூடி, ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கவும்.

7 மணி நேரத்திற்கு பிறகு அதை வெளியே எடுத்து, சாப்பிடுங்கள்..

ஸ்வீட்டான ஜில்லுனு சீதாப்பழம் ஐஸ்கிரீம் தயார்...! 
 

Representative Image.
Anbe vaa sunday special அன்பே வா! பூமிக்காவுக்கு நடக்கும் கொடூரம் : வருண் எடுக்கும் அதிரடி முடிவு 

Representative Image.
kana kanum kalangal haritha ப்பா! என்ன பொண்ணுடா இது! மல்டி டேலன்டடு தீபிகா!​​​​​​​


Representative Image.
ஜலபுல ஜங்குக்கு இப்படி ஒரு அர்த்தமா? இதுக்குலாமா அர்த்தம் இருக்கு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்