தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளிக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றைய நாள் நேரமாக எழுந்து எண்ணெய் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடுவோம். கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தீபாவளி அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இருப்பினும், இந்த வருடம் (அக்டோபர் 24, 2022) மகிழ்ச்சிக்கும் கொண்டாடத்திற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, நம்ம கதைக்கு வருவோம். தீபாவளி வந்துவீட்டாலே அனைவரது வீட்டிலும் அம்மாக்கள் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பலகாரங்கள் செய்வார்கள். அந்தவகையில் தீபாவளிக்கு செய்ய வேண்டிய ஸ்வீட் ரெசிபிகளை பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த ரெசிபியை செய்து சிறப்பாக கொண்டாடுங்கள். ஸ்வீட் எடு கொண்டாடு!
பாதுஷா என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். ஏனென்றால், அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்விட்களில் இதுவும் ஒன்று. அதுவும் தீபாவளி வந்துவிட்டாலே பாதுஷா தான். இது இல்லாமல் தீபாவளியே முழுமையடையாது.
➥ செய்முறை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சாப்பிடும் ஒரு பால் ஸ்வீட் தான் ரசகுல்லா. இந்த ரசகுல்லா செய்முறையில் சில டிரிக்ஸ் இருக்கிறது. அதை பின்பற்றி செய்தாலே ரசகுல்லா மிக எளிமையாகவும் மிருதுவாகவும் செய்துவிடலாம்.
➥ செய்முறை
ரசகுல்லா போன்றே ரசமலாயும் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த ரசமலாய் செய்முறையில் சில டிரிக்ஸ் இருக்கிறது. அதை பின்பற்றி செய்தாலே ரசமலாய் மிக எளிமையாக செய்துவிடலாம்.
➥ செய்முறை
பர்ஃபி, அனைவருக்கும் பிடித்த ஒரு சூப்பரான இனிப்பு வகை. இதை செய்வதும் மிக ஈஸி தான். அந்தவகையில் 4 வகையான பர்ஃபி ரெசிபிகளை நாங்கள் பட்டிலிட்டுள்ளோம். எப்படி என்று விரிவாக தெரிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
➥ செய்முறை
ஸ்வீட் என்றாலே அது குலாப் ஜாமூன் தான். இதன் பெயரை சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறும். அந்தளவிற்கு இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. நாவில் வைத்ததுமே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுன் செய்முறையில் சின்ன பிழை ஏற்பட்டாலும் இதன் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால், குலாப் ஜாமுன் செய்யும் போது எப்போதும் மிகவும் கவனத்துடன் மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் முக்கியம். எப்படி என்று விரிவாக தெரிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
➥ செய்முறை
தீபாவளி என்றாலே ஸ்வீட் தான் நினைவுக்கு வரும். ஸ்வீட் என்றாதும் முதலில் லட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த லட்டிலும் மோதிலட்டு தான் அதிகம் விரும்பப்படும் ஸ்வீட். துளி எண்ணெயில்லாமல் சுவையான மோதிலட்டு அல்லது மோத்திசூர் லட்டு செய்யலாம்.
➥ செய்முறை
பொதுவாக தீபாவளி நாளில் ஸ்வீட் செய்வது வழக்கம். அதுவும் லட்டு இல்லாமல் தீபாவளியே முழுமையடையாது. லட்டு என்றால் பூந்தி செய்து தான் லட்டு செய்வார்கள். ஆனால், இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாமே. இந்த ரெசிபிக்கு பூந்தி பிடிக்கவேண்டிய வேலையும் இல்லை. வெறும் மூன்றே பொருள் தான். மிகவும் எளிமையாக செய்துவிடலாம்.
➥ செய்முறை
நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் அதிரசமும் ஒன்று. அதிலும் வெல்லத்தை கொண்டு செய்யப்படும் அதிரசத்திற்கு சுவையே தனி என்று தான் சொல்ல வேண்டும். வீட்டில் செய்தால் சரியான பக்குவம் வராது என்ற காரணத்தால், நம்மில் பலரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். எந்த பண்டியாக இருந்தாலும் இந்த பலகாரம் இல்லாமல் அது முழுமையாது.
➥ செய்முறை
சாக்லேட் கேக் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதனால், நம்மில் பலரும் அவ்வப்போது பேக்கரிக்கு சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால், சாக்லேட் கேக்கை நாம் வீட்டிலேயே செய்ய நினைத்தாலும் அதற்கு ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும் என்று விட்டுவிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் குக்கரே போதும் மென்மையான பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ஈசியாக செய்யலாம்.
➥ செய்முறை
வால்நட் சாக்லேட் பிரவுனி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக் வகைகளில் இதுவும் ஒன்று. பொதுவாக இதை ஐஸ்கிரீமுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அதுவும் முட்டை இல்லாமல் செய்வதால் அனைவரும் சாப்பிடலாம். இந்த தீபாவளிக்கு இப்டி புதுசா செஞ்சி கொடுங்க. அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
➥ செய்முறை
ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கேக் என்று எது எடுத்தாலும் நமக்கு மிகவும் பிடித்தது சாக்லேட் சுவை தான். நாம் எல்லா நாளும் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாமே. பொதுவாக, கொக்கோ சேர்க்கப்பட்டு தயார் செய்யும் டார்க் சாக்லேட் அதிக சத்துக்கள் நிறைந்தவை.
➥ செய்முறை
தீபாவளி கார ரெசிபி:
இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க..
மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?
Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..!
Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....!
தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!
பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…
இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…