அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஒரு நாளைக்கு ஒரு முறை மேக்கப் போடுவது போய், தற்போது மேக்கப் கலைந்து விட்டதென பல முறை மேக்கப் செய்து கொள்வர். அதிலும், வெளியே செல்வதென்றால் ஒரு பேக் எடுத்துக் கொண்டு, அதில் முழுவதும் மேக்கப் கிட்ஸ் வைத்திருப்பர். வழக்கமான நாள்களிலே இப்படி என்றால், பண்டிகை காலம் வந்து விட்டால் போதும். என்ன மேக்கப் போடலாம், என்ன உடை உடுத்தலாம் என பண்டிகைக்கு பத்து நாள்களுக்கு முன்பாகவே யோசித்துக் கொண்டிருப்பர்.
நவீன காலத்தில் எத்தனையோ விதமான அழகுத் தோற்றம் வந்தாலும், இந்திய கலாச்சாரத்திற்கென தனி ஒரு சிறப்பு உண்டு. அதே சமயம், நாம் ஒவ்வொரு முறையும் பார்லர் சென்று தம்மை அழகுபடுத்திக் கொள்ள முடியாது. அது விலை உயர்வாக இருக்கலாம் அல்லது அவசரமான செயல்முறையாக இருக்கலாம். அப்படி அதிக அளவு செலவு செய்யாமல், வீட்டிலேயே பண்டிகைக் காலத்தில் நாம் மேக்கப் செய்து கொள்ளலாம். இதில் வரும் தீபாவளிக்கு எப்படி மேக்கப் போடலாம் என்பதைப் பார்க்கலாம்.
இதில், இந்திய கலாச்சாரமான பட்டுப்புடவை மற்றும் குறைந்தபட்ச நகைகளை உடுத்தி, மேக்கப்பிற்காக ஐ ஷேடோவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்தில் மாய்ஸ்சரைசர் மற்றும் ப்ரைமர் தடவிக் கொள்ளவும்.
இந்த மேக்கப்பில், ஐ ஷேடோ வானவில் போன்று தோற்றமளிக்கும். அதாவது வெண்கல நிறத்துடன் கண் இமை மீது தொடவ வேண்டும். முதலில் கண்ணின் ஐ-ஷேடோவை முடித்த பின், ஃபவுண்டேஷன் & Concealer-ஐ முகத்தில் தடவ வேண்டும். லிப்ஸ்டிக்கைப் பொறுத்த வரை, கேரட் இளஞ்சிவப்பு நிறம் அல்லது சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த தோற்றத்தில், முதலில் முகத்தைத் தயார் செய்ய வேண்டும். பின்னர் கண்ணை அழகுப் படுத்திக் கொள்ளலாம்.
கண் இமையில், Copper, Brown மற்றும் Maroon ஷேட்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. உதட்டிற்கு சிவப்பு நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.
இதில், வழக்கம் போல புடவை அணிந்து கொள்ளலாம். இதில் முகத்தில் புருவங்களை அழகாக்கியப் பிறகு கண் மேக்கப் செய்ய வேண்டும்.
இது மிகவும் எளிதான மேக்கப் ஆகும். இதற்கு குறைந்த அழகு சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன. முதலில், மாய்ஸ்சரைசர் மற்றும் ப்ரைமரைப் பயன்படுத்திய பிறகு கண் மேக்கபைப் பயன்படுத்த வேண்டும்.
லிப்ஸ்டிக்கை உங்கள் நிறத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.
பளபளப்பாக இருக்க விரும்பினால், மேக்கப் பெரியதாக இருக்கும். இதில், ஐ ஷேடோவைக் கவரும் வண்ணத்தில் பயன்படுத்த வேண்டும். அதிலும், சில்வர் ஷேடோ சிறந்த பலனளிப்பதாக இருக்கும். இதில் ஐ-ஷேடோ செய்யும் போது, ஒரு சிறிய பிரிவை உருவாக்குவது அவசியம்.
கண்ணில் இரண்டாக பிளக்கப்பட்ட கோட்டின் மேல் மடிப்புகளில் பல்வேறு டோன்களைக் காணலாம். அதன் கீழே, silver, burgundy ஐ-ஷேடோவைப் பயன்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…