Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 23:00 [IST]
சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?Representative Image.

ஆண் உறுப்பு அளவு குறித்து பெரும்பாலான ஆண்களுக்கும் குழப்பம் இருக்க தான் செய்கிறது. இதற்கு காரணம் ஆபாச படங்களே. பலரும் ஆபாச படங்கள் பார்த்து அதன்படி தனக்கு ஆண் உறுப்பு பெரிதாக இல்லையே என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதனால், சரியான அளவில் இருக்கும் ஆண் உறுப்பின் அளவு கூட சிறியதாக இருக்கிறதோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதிலும், சுய இன்பம் கொள்வதால் தான் ஏற்படுகிறதோ என்ற பயமும் ஆண்களுக்கு உண்டு. ஆனால், உண்மையில் இதனால் தான் ஆண் உறுப்புகளின் அளவு சிறிதாகிறதா? என்பதை தெரிந்துக் கொள்வோம். 

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?Representative Image

ஆண் குறியின் அளவு சிறிதாகுமா?

இந்த காலத்தில் சுய இன்பம் என்பது சாதாரணமான ஒரு விஷயம். அதனால் எந்த தவறும் இல்லை. அதேபோல், சுய இன்பத்தில் ஈடுபடுவதால் எந்த தீமையும் இல்லை. உண்மையில் சுய இன்பத்தால் ஆண் உறுப்பு சிறுத்து போகவோ சிறியதாகவோ ஆகாது. பொதுவாக, ஆண் உறுப்புகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம், அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. 

தூக்கமின்மைக்கான காரணங்கள், அறிகுறிகள், அதனை தடுக்கும் வழிமுறைகள்…!

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?Representative Image

சராசரி ஆண் உறுப்பு 9.5 செ.மீ. நீளம் இருக்கும். வெகு அரிதாகவே சிலருக்கு ஆண் உறுப்பு அளவு சிறியதாக இருக்கும். அவர்களுக்கு ஹார்மோன்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும். மேலும், உடல் பருமன் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு ஆண்குறி அளவு இயல்பாக இருந்தாலும் உறுப்பின் பாதி மட்டுமே வெளியில் தெரியும். இதனால் தான் கூட ஆண் உறுப்பு சிறிதாக இருப்பது போன்று தான் தெரியும். 

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?Representative Image

தாம்பத்திய உறவை பாதிக்குமா?

தாம்பத்திய உறவு என்று வரும்போது, ஆண் உறுப்பு அளவுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், பெரிய அல்லது நீண்ட ஆண் உறுப்பே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பதும் வெறும் நம்பிக்கை தான். ஏனென்றால், பெண்களுக்கு தாம்பத்திய உறவில் திருப்தி மட்டுமே போதுமானது. உடலுறவில் கிடைக்கும் இன்பம் சரியானதாக இருந்தாலே போதுமானது. 

உடலுறவுக்கு பின் இந்த பிரச்சனையால் கூட பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுமாம்... அலட்சியம் காட்டாதீங்க..  

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?Representative Image

அதனால் தான் பெரும்பாலும் பெண்கள் ஆண் உறுப்பின் அளவை எப்போதும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆகவே, எவ்வளவு சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை.  எனவே, நமக்கு சிறிய அளவு தான் இருக்கிறது நம்மால் பெண்ணைத் திருப்தி படுத்த முடியாது என்று நினைப்பதை தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், இது பின்நாளில் மனரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவை ஏற்படுத்தலாம். 

இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மனதை போட்டு வருத்திக்கொள்ளாமல், உடனே பாலியல் மருத்துவரை அணுகுவது நல்லது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்