பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மையமாக இருக்கக்கூடியது மாதுளை. மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் மாதுளை பழத்தைப் போலவே மாதுளையின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக மாதுளையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிற பண்பு அதிகம் இருக்கிறது. அதேபோலவே மாதுளையின் தோலிலும் ஆக்சிஜனேற்றிகள் அதிகமுள்ளதால் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.
சருமப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் மாதுளைப் பொடியைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒரே மாதிரி நிறம் இல்லாமல் (uneven skin tone) இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வந்தால் முகம் பொலிவு பெறும். பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஃபிரஸ்ஸான மாதுளை தோலினை இடித்து சாறெடுத்து 50 மில்லி அளவு குடித்து வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறைவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு ரிவர்ஸ் செய்வதற்கு இந்த மாதுளை தோல் பயனுள்ளதாக இருக்கும்.
பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் இயல்பாகவே காது மந்தமாகக் கேட்கும் பிரச்சினை உள்ளவர்கள் இருப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உடலில் ஆக்சிஜனேற்றிகள் குறைவாக இருப்பதது தான். இந்த மாதுளை பொடியில் மிக அதிக அளவு ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இவை காது கேளாமை பிரச்சினையை சரிசெய்யும்.
புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு. அதில் 50 சதவீதம் வீரியம் அதன் தோலுக்கும் உண்டு. மாதுளையின் தோலில் பாலிஃபினைல் அதிகம் இருக்கிறது. இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்றில் உள்ள அழற்சியை சரிசெய்து குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
மாதுளையின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வந்தால் அது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்கும். கல்லீரல் கொழுப்புகளையும் கரைக்கும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இனியாவது மாதுளையை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசாமல் அதன் முழு மருத்துவ குணங்களையும் உடலுக்குக் கொடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…