Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

Disadvantages of Eating Biscuits Everyday: காலை நேரத்தில் டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுற பழக்கம் இருக்கா? 

Nandhinipriya Ganeshan April 24, 2022 & 14:30 [IST]
Disadvantages of Eating Biscuits Everyday: காலை நேரத்தில் டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுற பழக்கம் இருக்கா? Representative Image.

Disadvantages of Eating Biscuits Everyday: காலை எழுந்தவுடன், டீயோ, காபியோ குடிக்கலைன்னா அந்த நாளே முழுமையாக முடியாது. அந்த அளவிற்கு நாம் டீக்கு அடிமையாகிவிட்டோம். ஒரு சிலர் அந்த டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிட ரொம்ப விரும்புவார்கள்... உண்மையை சொல்ல போனால் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் அந்த பழக்கம் இருக்க தான் செய்கிறது. ஆனால், அப்படி சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை.. வாங்க டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் (side effects of eating biscuits with tea in tamil) வரும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மார்பக புற்றுநோயைத் தடுக்க ஏதாவது வழி உள்ளதா? 

இரத்த சர்க்கரை அதிகமாகும்: 

பிஸ்கட்டில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இதை டீயில் தொட்டு நீண்ட காலமாக சாப்பிட்டால் அது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும். அதுமட்டுமல்லாமல், இதில் சோடியமும் அதிக காணப்படுகிறது. எனவே, தைராய்டு பிரச்சனை இருப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது.

கன்னத்தின் அழகை அதிகரிக்க இந்த பயிற்சியைச் செய்யுங்கள்!!!.

உடல் பருமன் ஏற்படும்:

பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் கொழுப்பு அதிகளவில் காணப்படுகிறது. இதை நீங்க டீயில் தொட்டு சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் மற்றும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ? இதைப் சாப்பிடுங்கள்!!!.

பல் சொத்தையாகும்:

சர்க்கரை நிறைந்துள்ள இந்த பிஸ்கட்டுகளை தினமும் சாப்பிட்டால் அது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இதனால், பற்களில் துவாரங்கள் உருவாகி பல் சொத்தை உண்டாக்கும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தடுக்க வேண்டுமென்றால், டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

நீங்க காபிக்கு அடிமையானவரா? அப்ப இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க!.

நோயெதிர்ப்பு சக்தி குறையும்:

பொதுவாக, சர்க்கரை நிறைந்த உணவு பொருட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில், சர்க்கரை அதிகம் இருக்கும் பிஸ்கட்டை நீண்ட நாட்கள் தொடர்ந்து டீயில் தொட்டு சாப்பிட்டால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து பலவீனமாக்கிவிடும்.

வெண்ணிலா ஐஸ்கிரிம் போன்ற பழமா! இது உண்மைதானா!.

மலசிக்கல் பிரச்சனை:

பிஸ்கட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இதில் நார்ச்சத்து சுத்தமாக இருக்காது. ஆகவே, பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகிக்கும். இதை தவிர பிஸ்கட்டுகளில் BHT மற்றும் BHA எனப்படும் 2 பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை (drawbacks of eating biscuits with tea daily in tamil) மிகவும் மோசமாக்குகிறது.

10 நிமிடத்தில் பழைய சாதத்தை வைத்து மென்மையான இடியாப்பம் செய்வது எப்படி?.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்