Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Pallipalayam Chicken Recipe: அசத்தலான சுவையில் ருசியான, காரசாரமான பள்ளிப்பாளையம் சிக்கன்!

Nandhinipriya Ganeshan April 13, 2022 & 16:10 [IST]
Pallipalayam Chicken Recipe: அசத்தலான சுவையில் ருசியான, காரசாரமான பள்ளிப்பாளையம் சிக்கன்!Representative Image.

Pallipalayam Chicken Recipe: சிக்கன் ரெசிப்பிகளில் பல வெரைட்டிஸ் இருக்கின்றன. அவை எல்லாமே தனித்துவமான டேஸ்ட்களுடன் சமைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், சிக்கன் ரெசிபிகளில் நம்ம தமிழ்நாட்டில் சமைக்கும் சிக்கனுக்கு தனி ருசி. அந்த வகையில், ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாச வித்தியாசமான முறையில் சிக்கன் சமைக்கப்படுகின்றன். அதில் சிக்கன் கிரேவிகளும், ஃப்ரைகளும் அடங்கும்.

அந்த வகையில் கொங்கு மண்டல பகுதிகளில் மிகவும் பிரபலமாக உள்ள பள்ளிபாளையம் சிக்கனும் ஒன்று. இந்த சுவையான சிக்கன் வெரைட்டியை ரெடி பண்ண நீங்க ரொம்ப நேரம் செலவிட தேவையில்லை. ஏனெனில், இதற்கான செய்முறை ரொம்பவே ஈஸியானது தான். அட்டகாசமான சுவையில் ஈசியான பள்ளிபாளையம் சிக்கன் (Easy Pallipalayam chicken recipe in tamil) எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1 கிலோ
  • எண்ணெய் - 6 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 12 (விதைகள் எடுக்கப்பட்டது)
  • சின்ன வெங்காயம் - கால் கிலோ
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • சிக்கன் மசாலா - 50 கிராம்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • சிக்கனை எலும்பு இல்லாமல் சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தமாக தண்ணீரில் அலாசி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு பொறிந்தவுடன் வரமிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  • அதற்குமுன் பாதி சின்ன வெங்காயத்தை உரித்து மிக்ஸியில் லேசாக அடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம் சிவந்த நிறத்திற்கு வந்தவுடன் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும், அப்போதே சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிக்கன் மசாலா தூளை போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
  • பின்னர் உப்பு தேவையான அளவு போட்டு 20 நிமிடம் வேக விடவும். துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவும்.
  • வெந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். இப்போது சூடான, ருசியான பள்ளிப்பாளையம் சிக்கன் ரெடி...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்