Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

அருமையான சுவையில் முட்டை சுக்கா? இப்படி செஞ்சி பாருங்க.| How to Make Egg Sukka

Gowthami Subramani Updated:
அருமையான சுவையில் முட்டை சுக்கா? இப்படி செஞ்சி பாருங்க.| How to Make Egg SukkaRepresentative Image.

முட்டை சுக்கா பொதுவாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக அமையும். வெளியில் கடைகளில் நாம் ஏதோதோ உணவுப் பொருள்களை வாங்கித் தருவதற்குப் பதில் வீட்டிலேயே சுவையான முட்டை சுக்கா செய்து தரலாம். இது முட்டை பிரியர்களுக்கு ருசித்து மகிழ்ந்து உண்ணக்கூடிய உணவுப் பொருளாகும். இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அருமையான சுவையில் முட்டை சுக்கா? இப்படி செஞ்சி பாருங்க.| How to Make Egg SukkaRepresentative Image

தேவையான பொருள்கள்

முட்டை – 7

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 3

கடுகு – ¼ டீஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – ¾ டீஸ்பூன்

மிளகு பொடி – ½ டீஸ்பூன்

சோம்பு – ½ டீஸ்பூன்

தனியா பொடி – 1 டீஸ்பூன்

சோம்பு பொடி – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – 2 சில்லு

எண்ணெய் – தேவையான அளவு

அருமையான சுவையில் முட்டை சுக்கா? இப்படி செஞ்சி பாருங்க.| How to Make Egg SukkaRepresentative Image

செய்முறை

முதலில், முட்டையை எடுத்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின், கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது அதில் கடுகு போட்டு பொறிக்க விட வேண்டும். அதன் பிறகு சோம்பு சேர்க்கவும்.

பிறகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதில், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

அதன் பின், பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பிறகு மீண்டும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக விடும் வரை கொதிக்க விடவும்.

இவ்வாறு நன்கு கொதித்த பின் கெட்டியாகும். அந்த சமயத்தில் கொத்தமல்லி தூவி வேக வைத்த முட்டையின் மேல் மூன்று கோடுகள் போடுகள் கிரேவியில் சேர்க்க வேண்டும்.

இறுதியாக, சோம்பு பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, நன்றாக கிளற விட்டு இறக்க வேண்டும்.

இவ்வாறு முட்டை சுக்காவை எளிதாக வீட்டிலேயே தயார் செய்யலாம்.

வரும் புத்தாண்டில் இந்த டிஷ் செய்து விருந்தினர்களுக்குப் பரிமாறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்