வித விதமான உணவுகளை உண்பது யாருக்குத் தான் பிடிக்காது. இட்லி, உப்புமா, தோசை என ஒரே உணவையே சாப்பிட்டு சில பேர் அதனை வெறுக்கவே செய்தனர். இந்த உணவுகளிலேயே வெரைட்டி வெரைட்டியாக சமைக்க முடியும். இந்த வரிசையிலேயே சேமியா உப்புமாவும் இருக்கிறது. இதில், சேமியா உப்புமாவின் வெரைட்டியாக முட்டை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
எண்ணெய் – 3 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கப்பட்டது)
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பச்சை பட்டாணி – ½ கப்
தண்ணீர் – 2 கப்
சேமியா – 2 கப்
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
தேவையான காய்கறிகள் – சிறிதளவு
✤ முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும்.
✤ பிறகு, சோம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
✤ அதன் பிறகு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
✤ பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ அடுத்து, மசாலா பொடிகள், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வேக வைத்து விடவும்.
✤ பின்னர், அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
✤ பின் சேமியாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதனுடன் கடைசியாக முட்டைகளை உடைத்து ஊற்றி தட்டம் கொண்டு மூடி விட வேண்டும்.
✤ பின், ஒரு முறை நன்கு கிளறி இறக்கி விடலாம்.
சுவையான மற்றும் சூப்பரான முட்டை சேமியா உப்புமா தயாராகிவிட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…