Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Face Glowing Tips in Tamil: ஹீரோயின் போன்ற பொலிவான சருமத்துக்கு ஹோம்மேடு டிப்ஸ்!

Manoj Krishnamoorthi March 29, 2022 & 12:00 [IST]
Face Glowing Tips in Tamil: ஹீரோயின் போன்ற  பொலிவான சருமத்துக்கு ஹோம்மேடு டிப்ஸ்!Representative Image.

பொதுவாக எல்லோருக்கும் மிருதுவான சருமமாக தங்கள் சருமம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும் ஆனால் முகத்தில் பரு, கரு வளையம் போன்ற சருமப் பிரச்சனைகள்  அழகைப் பாதிக்கும், அதிலிருந்து விடுபட வீட்டில்  இருக்கும் பொருட்களை வைத்தே நாம் தீர்வு காண முடியும். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள நம் வாசகத்தைப் பின்தொடருங்கள்.

முகத்தில் முகப்பரு இருப்பதை நம்மில் பலபேர் பெரியதாகக் கண்டுகொள்வதில்லை ஆனால் அதுவும் ஒரு தோல் பிரச்சனை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தோல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் முகப்பரு இருந்தால் செயற்கை ஸ்க்ரப்பிங் செய்வர் ஆனால் அதுவும்  சருமத்துக்குத் தீங்காகும். இதை இயற்கையாக நம் வீட்டிலுள்ள சில பொருட்கள் மூலம் சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Face Glowing Tips in Tamil

லெமன் ஸ்க்ரப்

சருமத்தில் உள்ள கெட்ட நுண்ணுயிர்களை  இயற்கையாக அழித்து சருமத்துக்கு ஆரோக்கியம் தரும், ஆனால் இந்த லெமன் ஸ்க்ரப் முகத்தில் செய்யாமல் கை கால்களுக்கு தேய்த்து வரத் தோல்கள் பொலிவு பெறுவதுடன் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

செய்முறை:  ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதியை எடுத்து அதில் தூளாக்கிய சர்க்கரையை உடன் சேர்த்துக் கொள்ளவும், எலுமிச்சையின் தோலையும் சேர்த்துக் கொள்ளலாம். வாரம் இருமுறை இந்த கலவையை கை கால்களில் தேய்த்து ஒரு 10 நிமிடம் சென்றபின் சுத்தமான நீரில் கழுவலாம்.     

வாழை ஸ்க்ரப்

வாழைப் பழம் இயற்கையாக மனித உடலுக்குப்  பல நன்மையைத் தரும் மகத்துவம் கொண்டது, வாழைப் பழ ஸ்க்ரப் சருமத்தை விரைவில் அழகாகப் பொலிவு பெறச் செய்யும்.

செய்முறை:  வாழைப் பழ ஸ்க்ரப் செய்யப் பழுத்த வாழைப்பழத்தில் தூளாக அரைத்த சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும், அதன்பின்  வாரம் 1 முறை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் காயும் வரை வைத்து நல்ல குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் மாற்றத்தைக் கண்கூட பார்க்கலாம்.  

பப்பாளி ஸ்க்ரப்

உயிர்ச்சத்து சத்து நிறைந்த பப்பாளி தயிருடன் சேர்ந்து சருமத்துக்கு மிருதுவான பொலிவைத் தரும், பப்பாளியின் குளிர்ச்சி கண்ணைச் சுற்றி அமைந்துள்ள கருவளையத்தை அகற்றும். 

செய்முறை: நன்கு பழுத்த பப்பாளி எடுத்து துண்டுதுண்டாக நறுக்கி, அதில் தேவையான அளவு தயிர், 1 ஸ்பூண் தேன் மற்றும் கொஞ்சம் எலுமிச்சம் சாறு சேர்த்து பப்பாளி ஸ்க்ரப் பேஸ்ட் தயாரிக்கலாம். வாரம் 1 முறை இந்த கலவை முகத்தில் அப்ளை செய்து  5 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல மாற்றம் தெரியும். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற  Tamil  இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...       


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்