Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Famous Streed Food in Tamil Nadu: நம்ம ஊரு ரோட்டு கடை சாப்பாட்ட அடிச்சிக்க முடியுமா…!! இதுல உங்களுக்கு புடிச்ச டிஷ் சொல்லுங்க..!!

Nandhinipriya Ganeshan May 17, 2022 & 17:00 [IST]
Famous Streed Food in Tamil Nadu: நம்ம ஊரு ரோட்டு கடை சாப்பாட்ட அடிச்சிக்க முடியுமா…!! இதுல உங்களுக்கு புடிச்ச டிஷ் சொல்லுங்க..!!Representative Image.

Famous Streed Food in Tamil Nadu:

நம்ம தமிழ்நாட்டில் ரோட்டுக் கடை உணவுக்கு ஒரு தனி சுவை தான். என்னதான் பெரிய பெரிய ஹோட்டல்களில் போய் சாப்பிட்டாலும், ரோட்டுக் கடையில் சாப்பிடும் அந்த சுவையும் ருசியும் தனி அனுபவத்தை தரும். பல நேரங்களில் வேலைக்கு செல்லும் பலரின் வாழ்க்கையும் இதில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது, நம்ம தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ரோட்டு கடை உணவுகளை பற்றி ஒரு பார்வை…

இட்லி, சாம்பார்

தமிழ்நாட்டில் ரோட்டோரங்களில் செய்யப்படும் இந்த இட்லி, சாம்பாருக்கு ஈடு எதுவுமே இல்லை. அவ்வளவு டேஸ்ட், இப்போதெல்லாம் பல பேச்சுலர்களின் வாழ்க்கை ரோட்டுக் கடைகளை நம்பி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முதலில் அல்ல எல்லா நேரங்களிலும் சுவையான உணவு என்றால் இட்லி, சாம்பார் தான். அதுமட்டுமல்லாமல், இட்லிகள் தமிழர்களின் பிரபலமான காலை உணவும் கூட இதுதான். இட்லி ஒரு கொழுப்பு இல்லாத சிறந்த டயட்டிங் உணவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மேலும், தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி மற்றும் சாம்பார் மிகவும் பிரபலமான உணவு என்றும் கூட சொல்லலாம். அதோபோல், சாம்பார் என்பது தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான குழம்பு. சாம்பாருடன் பன்னை தொட்டு சாப்பிட்டால் ஆஹா ஆஹா அப்படி ஒரு சுவை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

பரோட்டா

இட்லிக்கு அடுத்தபடியாக நமக்கு நினைவுக்கு வருவது பரோட்டா தான். முக்கியமாக, இரவு நேரங்களில் தான் இதை ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். உண்மையை சொல்ல போனால், இரவு நேரத்தில் வீட்டில் சமையல் செய்யாவிட்டாலும் இதை தான் உடனே வாங்கிட்டு வர சொல்லுவார்கள். எல்லா இடத்திலும் ஒரு பரோட்டா ஸ்டாலை காண முடியும். பரோட்டா பெரும்பாலும் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு வகையான கூர்மாவுடன் தயார் செய்யபடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஊரை பொறுத்தும் பரோட்டாவின் டேஸ்ட் மாறுபடும். சொல்லப்போனால், பரோட்டாவை வாங்க அடித்துக்கொள்வதும் நம் தமிழர்கள் தான். ஆனாலும் அதிலும் ஒரு தனி சுவை தான்.

முட்டை கலக்கி

கலக்கி என்பது தென்னிந்திய ஆம்லெட். இதை பெரும்பாலும் பரோட்ட கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். இது சாப்பிடுவதற்கு வழக்கமான ஆம்பெல் போல தான் இருக்கும், ஆனால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிட வைக்கும் அளவிற்கு வித்தியாசமான சுவை. ரோட்டு கடையில் இதுவும் ஃபேமஸான உணவு தான். முட்டையை விரும்பி சாப்பிடும் முட்டை பிரியர்களுக்கு இது ஒரு டேஸ்ட்டான டிஷ், இதை பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு இறுதியாக சாப்பிடுவார்கள்.

முட்டை தோசை

இட்லியின் சகோதரன் என்றும் சொல்லலாம். தோசை தமிழர்களின் மற்றொரு விருப்பமான ஒரு டிஷ். தோசையை சமைக்கும்போது அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், மிளகு தூள் தூவி ஒரு பக்கம் நன்றாக வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் போட்டு தருவாங்க பாருங்க.. ஆஹா அந்த வாசனை வாயில் எச்சில் ஊற வைக்கும்... வீட்டுல செஞ்சா கூட இவ்வளவு டேஸ்ட் வராதுங்க.

மெதுவடை

தமிழர்களின் மிகவும் விருப்பமான ரோட்டு கடை(roadside food in tamil nadu) உணவுகளில் ஒன்று வடை. வடைகளில் பல வகை உண்டு. இனிப்பு, காரம்...  ஆனால், எல்லா வடையிலும் மிகவும் விரும்பப்படும் வடை உளுந்து வடை. இதை மெது வடை என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த மழைநேரத்தில் சுடசுட நாக்கு இதை தான் தேடும். இந்த வடையை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியில் தொட்டு சாப்பிட்டால் ஆஹா... அதுமட்டுமல்லாமல், சாயங்கால நேரத்தில் வடைகள் டீ அல்லது காபியுடன் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக் ஆகும்.

மசாலா பூரி

மசாலா பூரி என்னதான் வட இந்திய உணவாக இருந்தாலும், இந்த ரெசிபி தமிழ்நாட்டின் தெருக்களில் மிகவும் பிரபலமானதாகி விட்டது. வேகவைத்த கொண்டைக்கடலை, சேவ், தக்காளி, வெங்காயம் மற்றும் பூரி ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படும் இந்த உணவு பலரின் ஈவ்னிங் ஸ்நாக்ஸாக விரும்பி சாப்பிடப்படுகிறது. இதன் சுவையை ருசித்தவர்களுக்கு தெரியும் இதன் மகிமை. ஆனால், இதை சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.

பானி பூரி

நம்ம ஊருல அதிகம் விற்பனையாகும் மற்றொரு வட இந்திய உணவு பானி பூரி. இதில் ஒரு உணவில் இருக்க வேண்டிய அனைத்து சுவையும் இருக்கின்றன. இனிப்பு, புளிப்பு, காரம் வாயில் நீர் ஊறவைக்கும். இது பலரின் ஃபேவரட் ஃபுட் ஆகவும் இருந்துவருகிறது. இதையும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பஜ்ஜி, போண்டா

பஜ்ஜியும் போண்டாவும் சகோதரர்கள். இது இல்லாமல் மற்றொன்று இருப்பதில்லை. போண்டாவில் பல வகை உண்டு. உருளைக் கிழங்கு போண்டா, மசாலா போண்டா, வெங்காய போண்டா. அதோப்போல், பஜ்ஜியிலும் பல உண்டு. மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, உருளை கிழங்கு பஜ்ஜி.. சாயங்கால நேரம் வந்துவிட்டாலே நாக்கு சூடாக எதையோ ஒன்று தான் தேடும். உடனே, கடைக்கு போய் சுட சுட நாலு பஜ்ஜி, போண்டாவை வாங்கி சாப்பிட்டால் தான் மனசுக்கு ஒரு நிறைவு வரும். அதிலும் மழைக்காலத்தில் அதிகம் சேல்ஸ் ஆகும் ரோட்டுக் கடை உணவு என்று சொன்னால் இவை தான்.

தட்டு வடை செட்

ரோட்டு கடையில கிடைக்கும் இந்த தட்டு வடை செட்டிற்கு அப்படி ஒரு தனி சுவை. இந்த தட்டு வடை செட் சேலத்தில் ரொம்ப ஃபேமஸ். இரண்டு தட்டு வடைக்கு நடுவில் கேரட், பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் பேஸ்ட், சிவப்பு மிளகாய் பேஸ்ட் வைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தூவி ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள். மலிவான விலையில் அற்புதமான ருசியில் ஒரு சூப்பரான டிஷ். சாப்பிடாதவர்களே இருக்க (street food in tamil nadu) முடியாது. இதை பிடிக்காதவர்களும் இருக்க முடியாது. 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்