Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

New Medicine for Cancer: பெரிய குட்நியூஸ்! வரலாற்றில் முதல்முறையாக கேன்சரை 100% குணமாக்கும் மருந்து வந்தாச்சு....!!!

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 12:00 [IST]
New Medicine for Cancer: பெரிய குட்நியூஸ்! வரலாற்றில் முதல்முறையாக கேன்சரை 100% குணமாக்கும் மருந்து வந்தாச்சு....!!!Representative Image.

New Medicine For Cancer: உலகில் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் இன்னும் குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோய் என்றால் அது கேன்சர் தான். இந்த நோயை குணப்படுத்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்னமும் பல ஆராய்ச்சிகள், ஆய்வுகள் நடத்தப்பட்டு தான் வருகிறது. ஆனால், கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. 

ஒரு சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக குணப்படுத்த முடியாமல் இருந்தது. இப்ப வரைக்கும் கேன்சருக்கு கீமோதெரிபி சிகிச்சைதான் முக்கிய சிகிச்சையாக இருந்து வருகிறது. 

புற்றுநோய்:

நம் உடலில் சத்தமில்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு கொண்டு செல்லும் மிகவும் மோசமான நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த நோய் வந்துவிட்டாலே மரணம் தான் என்ற நிலை மாறி, அதற்காக பல்வேறு சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் அதிலிருந்து முழுமையாக குணமடைய முடியாது என்று மக்கள் பயந்துக் கொண்டுத் தான் இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறைகளும் கடும் வலியை ஏற்படுத்தும் வகையிலும், செலவு மிகுந்ததாகவும் இருக்கிறது.

என்ன மருந்து?

இந்நிலையில், அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட "டாஸ்டர்லிமேப்" (Dostarlimab) என்ற மருந்து சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்திய சம்பவம் உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹாட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

18 பேர் பூரண குணம்:

மிகச் சிறிய அளவில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், மூன்று வாரத்துக்கு ஒரு முறை வீதம், தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த செலுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின், மருந்தில் உள்ள மூலக்கூறுகள் மனித  உடலில் மாற்று ஆண்டிபாடிகளாக செயல்பட்டு, அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். 

பின்னர், கேன்சரை கண்டறியப் பயன்படுத்தும் அனைத்துச் பரிசோதனைகளிலும் கேன்சல் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

மேலும் இவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்று மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மருந்து மீண்டும் புற்றுநோய் வரமாலும் தடுக்குமாம்.


உங்க காலு அடிக்கடி உறைஞ்சு போகுதா…?? அது இந்த புற்றுநோயின் அறிகுறியாகும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்