Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடவே சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்....! 

Nandhinipriya Ganeshan April 27, 2022 & 07:45 [IST]
இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடவே சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்....! Representative Image.

Foods to Avoid with Eggs: அனைவருக்கும் ஃபேவரட் உணவு என்றால் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது முட்டை தான். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கு மிகவும் பயனுள்ள உணகளில் முட்டையும் ஒன்று. அதுமட்டுமல்லாமல், பல ரெசிப்பிகளை இந்த ஒரு பொருளை வைத்து செய்ய முடியும். இதில் வைட்டமின்கள் ஏ, பி12, பி6, ஃபோலேட், புரதம், இரும்பு, அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஆனால், சரியான முறையில் முட்டைகளை சமைத்து சாப்பிட்டால் மட்டுமே இந்த சத்துக்கள் உடலுக்கு அப்படியே கிடைக்கும். எல்லா உணவு பொருட்களுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஏனெனில், பல சமயங்களில் சில உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடுபவர்களின் உடல்நிலை மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஒவ்வொருக்கும் ஒருவிதமான டேஸ்ட் இருக்கும். ஆனால், அது எல்லா உணவுப் பொருட்களுக்கும் பொருந்தாது. எனவே, முட்டையும் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பார்க்கலாம்.

சர்க்கரை மற்றும் முட்டை:

சர்க்கரை அதிகம் காணப்படும் உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். காரணம், இந்த இரண்டு பொருட்களிலும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது, முட்டையுடன் சர்க்கரையை சேர்த்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்க முட்டையை சர்க்கரையுடன் சேர்த்து மீண்டும் மீண்டும் சாப்பிட்டால், அது இரத்த உறைதலுடன் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது நாள் அப்படி சாப்பிட்டு வந்திருந்தால், உடனே அதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

வறுத்த மாட்டிறைச்சி மற்றும் முட்டை:

பல இடங்களில் மக்கள், முட்டையுடன் மாட்டின் இறைச்சியை சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதில் புரதம் மற்றும் கொழுப்பு அதிகளவில் நிறைந்திருப்பதால், இந்த கலவையானது உங்கள் சோம்பலுக்கு காராணமாக அமைந்துவிடும். பொதுவாக முட்டை உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய ஒரு உணவு. ஆனால், அதை மாட்டிறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்களை விரைவில் சோம்பேறியாக மாற்றிவிடும்.

மீன் மற்றும் முட்டை:

மீன் மற்றும் முட்டை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் ஒன்றுக்கொன்று சலித்ததில்லை. ஏனெனில், இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன. ஆனால், இந்த ஆரோக்கிய நிறைந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உட்கொள்வதால் சருமத்தில் அலர்ஜி (side effects of eating egg with fish in tamil) ஏற்படும். மீன் மற்றும் முட்டை இரண்டின் வெப்பம் காரணமாக அவற்றை ஒன்றாக சாப்பிட்டால், தோலில் வெள்ளை நிற புள்ளிகள் அல்லது பருக்கல் ஏற்படலாம். இதை தடுக்க வேண்டுமென்றால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் முட்டை:


 

இன்றைய பரபரப்பான சூழ்நிலைகளில், மக்கள் காலை உணவாக முட்டை மற்றும் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடுகிறார். ஆனால், வாழைப்பழங்களை முட்டையுடன் சேர்த்து உட்க்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை, முட்டை மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தீர்கலென்றால், அது உங்களுக்கு அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை கூடிய விரைவில் உண்டாக்கும்.

பெர்சிம்மன் பழம் மற்றும் முட்டை:

பார்ப்பதற்கு தக்காளியை போன்று தோற்றமளிக்கும் இந்த பெர்சிம்மன் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த பழத்தை முட்டையை சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால், இரைப்பையை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்து, உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்துவிடும். இனிமேல், முட்டை சாப்பிடும் போது கவனத்தோடு சாப்பிடுங்கள்.

டீ மற்றும் முட்டை:

காலை நேரத்தில் அனைவருக்கும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், ஒரு சில இடங்களில் பெரும்பாலானோர் காலை உணவாக முட்டை மற்றும் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், முட்டையுடன் டீ குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு கேடு விளைக்கும் என்று தெரியுமா? டீ மற்றும் முட்டையை ஒன்றாக சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வருவந்தால், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டை மற்றும் டீயை ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீங்க.

எலுமிச்சை மற்றும் முட்டை:

எலுமிச்சை பழம் பொதுவாக உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் போது அதில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

சோயா பால் மற்றும் முட்டை:

சோயா பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக காணப்படுகின்றன, மேலும் அதன் வழக்கமான நுகர்வு உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, முட்டையுடன் சோயா பாலை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்