Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...

Nandhinipriya Ganeshan September 28, 2022 & 14:30 [IST]
தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image.

இந்த அவசரமான காலக்கட்டத்தில் நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும், அழகிற்காவும் நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது. இருப்பினும், எவ்வளவு வேலை இருந்தாலும் நம்முடையை ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிப்பது நம்முடைய கடமை தானே. அந்தவகையில், நம்மில் பலரும் சந்திக்கும் மிகப் பெரிய ஆரோக்கிய அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றான முடி உதிர்வுக்கு ஒரு சிறந்த தீர்வு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நீங்கள் முடியை பராமரிப்பதற்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களா? இந்த குறிப்பை குறைந்தது ஒரு மூன்று நாட்கள் முயற்சித்து பாருங்கள். உங்களுக்கு ஒரு பெரிய மாற்றம் தெரியும்.

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான ஒரு பொருள் கற்றாழை. காற்றாழையின் மகிமையை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. ஏனென்றால், அனைத்து விதமான அழகு சார்ந்த பிரச்சனைக்கும் முதலில் பரிந்துரைப்பது கற்றாழையை தான். இரண்டு பெரிய கற்றாழை இலையை பறித்து, முதலில் சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். ஏனென்றால் வெட்டிய இடத்தில் கசியும் அந்த மஞ்சள் நிற பாலோடு எந்தவிதமான அழகு குறிப்புக்கும் பயன்படுத்தக் கூடாது. அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். 

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image

இப்போது அந்த கற்றாழை இலையின் பச்சை தோலை அதாவது மேல் தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லோடு நீங்க தலைக்கு பயன்படுத்தக்கூடிய எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி அல்லது சீயக்காய் பயன்படுத்தினாலும் சரி அதை உங்களுடைய முடிக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image

சீயக்காய் பொடியை இந்த ஜெல்லோடு போட்டால் கொஞ்சம் கட்டி கட்டியாக தான் இருக்கும். எனவே, கையை பயன்படுத்தி நன்றாக கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக் கொள்ளவும். இதை தலைக்கு குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பு தலையில் போட்டு விடுங்கள். ஷாம்புவை குறைந்தது 10 நிமிடங்களுக்கு மேல் தலையில் வைத்திருக்கக் கூடாது என்பார்கள். அதுவும் உண்மையே. நாம் அந்த ஷாம்புவை நேரடியாக எந்த ஒரு பொருளுடனும் கலக்காமல் அப்படியே பயன்படுத்தினால் தவறு. ஆனால், நாம் கற்றாழை உடன் கலந்து தானே தலையில் ஊற வைக்கப்போகிறோம். இதனால், ஷாம்புவின் கெமிக்கல் தன்மை பாதியாக குறைந்துவிடும். எனவே, கவலைப்பட வேண்டாம். 

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image

15-20 நிமிடங்கள் ஊறிய பிறகு தலையை அலசிவிடுங்கள். மீண்டும் ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவ்வளவு தாங்க. இதை வாரத்தில் 2 அல்லது 3 முறை கூட பயன்படுத்தலாம். செம்ம ரிசல்ட் கொடுக்கும். இந்த பேக்கை தயார் செய்ய காலை நேரத்தில் நேரம் இல்லையென்றால், முந்தைய நாள் இரவே பேக்கை தயார் செய்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடிபோட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலை அதை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைத்துவிட்டு, குளிர்ந்த தன்மை சுத்தமாக குறைந்த பின்னர் பயன்படுத்தவும். 

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...Representative Image

இதை 3 முறை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தி வரும்போது முடி வளர்ச்சி நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வு, முடி மெலிவு, பொடுகு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்லலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்