எல்லோருக்குமே நீளமான அடர்த்தியான தலைமுடி தான் மிகவும் பிடிக்கும். அப்படி யாரையாவது பார்த்தாலும் நமக்கு ஒரு பொறாமை வரும். இதற்கு காரணம் நமக்கு இல்லையே என்ற கவலை தான். இனி அந்த கவலையே வேண்டாம். நீளமான அடர்த்தியான கூந்தலை பெற முதலில் முடிஉதிர்வை சரி செய்ய வேண்டும். அதற்காக விதவிதமான ஷாம்பு, எண்ணெயை தடவினால் மட்டும் போதாது. முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உள்ளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்க ரொம்ப செலவும் செய்ய தேவையில்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே நிறைய சத்து இருக்கிறது. அதை முறையாக எடுத்துக்கொண்டாலே நம் தலைமுடிக்கு போதுமானது.
குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க..
நம் முடிவளர்ச்சியை தூண்ட தினமும் மோர் குடித்தாலே போதும். என்னாது மோரா? மோர் குடித்தால் எப்படிமா முடி வளரும் என்று நீங்கள் கிண்டல் செய்வது எனக்கு கேட்கிறது. ஆனால், நீங்கள் நினைப்பது போன்று வெறும் மோர் மட்டும் கிடையாது. அதில் ஸ்பெஷலாக சில பொருட்களையும் சேர்க்கப் போகிறோம். இது தான் நம் முடியின் வளர்ச்சியை தூண்ட உதவும். இதை மட்டும் தினமும் பருகி வாருங்கள். பிறகு எந்தவிதமான தலைமுடி பிரச்சனையும் உங்களை நெருங்காது.
இந்த வருஷம் பொங்கல் பரிசுத்தொகுப்பில் புதிய மாற்றம்.. முதலமைச்சரின் புது பிளான்..
வாங்க முடிஉதிர்வை தடுத்து நிறுத்தும் ஸ்பெஷல் மோர் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம். ஒரு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலை, துருவிய இஞ்சி 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், கெட்டியான தயிர் 3 டீஸ்பூன், உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்ட வேண்டாம். இந்த மோரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இளநரை, முடி உதிர்தல், வழுக்கை விழுதல், முடிவெடிப்பு, பொடுகு, வலிமை இல்லாத முடி என்று அனைத்து முடி சம்பந்தமான பிரச்சனையும் விரைவில் குறைந்துவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…