Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இதய நலனை பாதுகாக்கும் அஷ்ட சந்திராசனம் செய்யும் முறை..

Nandhinipriya Ganeshan Updated:
இதய நலனை பாதுகாக்கும் அஷ்ட சந்திராசனம் செய்யும் முறை..Representative Image.

Halasana Yoga Benefits: அஷ்ட சந்திராசனத்தை (Ashta Chandrasana)  High lunge அல்லது Crescent lunge pose அல்லது Alanasana என்றும் அழைப்பர். வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள்; ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும்.  இந்த ஆசனத்தை செய்யும் போது நெகிழ்வுத்தன்மையும், சமநிலையும் மேம்படுகிறது. மேலும், இது இடுப்பு நெகிழ்வுகளை திறக்கிறது. 

செய்முறை:

  • முதலில், ஒரு பாயின் மீது இரண்டு பாதங்களுக்கு (Procedure of halasana) இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும்.
  • மூச்சை வெளிவிட்டவாறு வலது காலை 3 முதல் 4 அடி பின்னால் வைக்கவும். கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும்.
  • பின்னர், இடது காலை மடக்கி கொள்ளவும். இடது முட்டியும் இடது பாதமும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும். 
  • இப்போது மூச்சை உள்ளிழுத்து உள்ளங்கைகள் ஒன்றையொன்று பார்த்தவாறு இரு கைகளையும்   வானத்தை நோக்கி உயர்த்தவும். 
  • பின்னர் தலை நேராகப் பார்த்தபடி, 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்து மீண்டும் மூச்சை வெளிவிட்டு ஆரம்ப நிலைக்கு வரவும்.
  • இதோபோல் இடது காலைப் பின்னால் வைத்தவாறு (halasana for beginners) இதை மீண்டும் செய்யவும். 

குறிப்பு: முட்டி மற்றும் இடுப்பில் தீவிர பிரச்சனை இருப்பவர்கள் இவ்வாசனத்தை தவிர்க்கவும்.

பயன்கள்:

  • உடலின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
  • கால்கள் மற்றும் கைகளை வலுப்படுத்துகிறது
  • மூட்டுகளை (halasana benefits in tamil) பலப்படுத்துகிறது
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • உடல் ஆற்றலை வளர்க்கிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்